33-காப்பது விரதம்

நகர்புறத்திற்கு தள்ளி இருந்த ஒரு பகுதி முள் செடிகளும், புதர்களும் மன்றியிருந்த இடம்.

அந்தப் பகுதியில் இடம் வாங்கி போட்டு இருந்தார்கள்.

வீடு கட்டலாம் என எண்ணி வாஸ்து பூஜைகள் செய்து வீடு கட்ட ஆரம்பித்து விட்டார்கள் மனோவும், ஈஸ்வரியும்.

பெயரில் மட்டும் ஈஸ்வரி அல்ல! பக்தியுடன் இருப்பதிலும் ஈஸ்வரி தான்.

அவர்கள் வீடு கட்டும் போது சல்லிகள், செங்கல் எடுக்கும் போது அடியில் குட்டி பாம்புகள் பத்துக்கும் மேல் இருக்கும்…

அதைக் கண்ட வேலை ஆட்கள் பாம்பை அடிக்க கட்டைகளைத் தூக்கி வந்தார்கள்.

அதை கண்ட ஈஸ்வரி அவர்களை அடிக்க வேண்டாம் என தடுத்தவள். வேறு வேலைகளைச் செய்யச் சொல்லி அனுப்பி விட்டாள்.

மூன்று மணி நேரம் சென்றவுடன் சென்று பார்த்தபோது அங்கு ஒரு பாம்பு குட்டி கூட இருக்கவில்லை. வேறு எங்கோ சென்று விட்டது.

அவள் மட்டும் தடுக்கவில்லை என்றால் அத்தனை குட்டி பாம்புகளையும் கொன்று இருப்பார்கள். உயிர்களை கொள்ளாமல் இருப்பதும், காப்பாற்றுவதும் கூட விரதம் தான். இதை உணர்ந்த ஔவையார் “காப்பது விரதம்” என்று கூறியிருக்கிறார்.

Share.

Leave A Reply