33-கடிவது மற
அன்று விடுமுறை என்பதால் தூங்கிக் கொண்டு இருந்தாள் கலா.
கலாவை அம்மா எழுப்பினாள். பத்து மணி ஆகிவிட்டது. எழுந்திரு என்றாள் சுபா.
கலா முழித்துக் கொண்டாள் என்றாலும் எழுந்திருக்க மனம் வரவில்லை.
அதைக் கண்ட சுபாவிற்கு கோபம் வந்துவிட்டது. எழுந்திரு என்று தண்ணீர் எடுத்து வந்த முகத்தில் தெளித்தாள் சுபா.
ஏன் அம்மா! இப்படி செய்தீர்கள் என்று அழ ஆரம்பித்துவிட்டாள் கலா.
எழுந்தவளுக்கு, அம்மா மீது கோபம்… கோபமாக வந்தது.
இப்படி அன்றைய… விடுமுறை ஒருவரை ஒருவர் கடிந்து பேசுவதில் கழிந்து விட்டது.
ஏன் தான் விடுமுறை விட்டார்கள்? என்று நினைத்தாள் கலா.
பலரின் வீடுகளில் நடப்பதை கண்ட ஔவையார் “கடிவது மற” என்று சொல்லிச் சென்று இருக்கிறார்.