31-அனந்த லாடேல்

வாசு தினமும் பள்ளிக் கூடத்திற்கு தாமதமாகவே வருவான்.

சரியான நேரத்திற்கு வர வேண்டும் என ஆசிரியர் தினமும் சொன்னாலும், தாமதமாகவே வருவான்.

உன் பெற்றோரை அழைத்துக் கொண்டு வா! என ஆசிரியர் ஒரு நாள் சொல்லிவிட்டார்.

அம்மாவிடம் சென்று தயங்கி…. தயங்கி நின்றான் வாசு.

என்ன…. என மகனை அழைத்து விசாரித்தாள் அமுதா.

அம்மா…. நான் பள்ளிக் கூடத்திற்கு தாமதமாக போவதால் பெற்றோரை அழைத்துக் கொண்டு வரச் சொல்லிவிட்டார்கள்.

நாளைக்கு பெற்றோரை அழைத்துக் கொண்டு தான் வரவேண்டுமாம் என்றான்  வாசு.

வாசு என்ற அமுதா! தூக்கம் என்ற சோம்பல் அம்மா, அப்பா மேல் கோபம் வந்தது. இன்று ஆசிரியர் அழைத்து வரச் சொன்னதும், உனக்கே ஒரு தயக்கம் வருகிறது பார்த்தாயா என்றாள் அமுதா!

வாசும் மௌனமாக அமர்ந்து இருந்தான்.

இனியாவது காலையில் எழுந்து நேரத்தில் கிளம்பு எல்லாம் சரியாகிவிடும். நாளைக்கு அப்பாவும், நானும் வருகிறோம் என்றாள் மகனின் தலையை ஆறுதலாக தடவிய படி அமுதா.

அம்மா திட்டுவார்கள் என்று நினைத்த வாசுவிற்கு அம்மா சொன்ன வார்த்தைகள் இனிமேல் அதிகமாக தூங்கக் கூடாது என்ற உறுதியை ஏற்படுத்தியது.

அதிகமாகத் தூங்கக் கூடாது என்பதை ஔவையாரும்  “அனந்த லாடேல்” என்று சொல்லி இருக்கிறார்.

Share.

Leave A Reply