30-அறனை மறவேன்
உச்சி வெயில் எண்ணெய் தேய்க்காத பறந்த வெள்ளை முடி.
அழுக்கு படிந்த வேஷ்டி, சட்டை அணிந்து கையில் தடியை பிடித்துக் கொண்டு தள்ளாடி… தள்ளாடி வந்த வயதானவர்.
எதிர் பாராத நிலையில் தடியை ஒரு கல்லின் மேல் வைக்க நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார்.
சாப்பிடாமல் இருந்து இருப்பார் போலும் விழுந்த வேகத்தில் மயக்கம் ஆகிவிட்டார்.
இதைக் கண்ட தெருவோர தள்ளுவண்டி கடைக்காரர் ஓடி வந்து தூக்கி உட்கார வைத்தார்.
அவரிடம் இருந்த தண்ணீரை எடுத்து வந்து முகத்தில் தெளித்து குடிக்க கொடுத்தார்.
சாலையில் போனவர்கள் சிலர் வந்து அவர் ஓரமாக உட்கார வைக்க உதவினார்கள்.
தள்ளுவண்டி கடைக்காரர் ‘டீ’யும் பண்ணும் வாங்கி வந்து சாப்பிட கொடுத்தார்.
சாப்பிட்ட வயதானவர் தன் நிலைக்கு வந்தார்.
எல்லோரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டார். சாப்பிட கொடுத்த தள்ளுவண்டி காரரைப்… பார்த்து நன்றி தம்பி,
வெயில், தாகம், பசி தடுமாறிவிட்டேன். என்றவர் மெதுவாக எழுந்து நடக்க ஆரம்பித்தார்.
பார்த்து போங்கய்யா! என்று கருணையுடன் சொன்னார் தள்ளுவண்டி கடைக்காரர்.
சரி, தம்பி என்று தலையை ஆட்டிக் கொண்டே நடந்தார் அந்த முதியவர்.
எந்த நிலையிலும் ஒருவருக்கு தர்ம காரியம் செய்ய வேண்டும் என்பதை ஔவையாரும் “அறனை மறவேல்” என்கிறார்.