28-அழகலாதன செயேல்

கோபியும், மதனும் கோயிலுக்கு சென்றார்கள். அன்று வெள்ளிக்கிழமை கூட்டமாக இருந்தது.

வரிசையில் நின்றவர்கள். வரிசை நீண்ட தூரமாக இருந்தது. அபிசேக பூசை முடிந்து திரை போட்டு சாமிக்கு அலங்காரம் செய்து கொண்டு இருந்ததால் வரிசை நகரவில்லை.

கோபி அமைதியாக நின்றான். மதனுக்கு பொறுமை இல்லை.

பக்க கம்பியில்
உட்காருவான் பின் எழுந்து நிற்பான். வரிசையைப் பார்ப்பான். இன்னும் போக வில்லையே என முணுமுணுப்பான்  இப்படி அமைதி இல்லாமல் நின்றான்.

மதன் தவிப்பை புரிந்து கொண்ட கோபி. மதன் சாமியை கும்பிட வந்துவிட்டோம் அமைதியாக இரு. இதோ வரிசை நரக ஆரம்பித்து விட்டது என்றான்.

அப்பாடா! என்று மூச்சு விட ஆரம்பித்த மதன் நடக்க ஆரம்பித்தான்.

சில இடங்களில் அமைதியாக இருப்பது ஒழுக்கம் ஆகும்.

அதை மதிக்காமல் நடக்கக் கூடாது. என்பதை ஔவைப் பாட்டி “அழகலாதன  செயேல்” என்று சுட்டிக் காட்டுகிறார்.

Share.

Leave A Reply