25-அரவ மாட்டேல்

சின்ன கிராமம் அதில் ராசு என்ற சிறுவன் அவர்கள் அண்ணனுடன் தங்கிப் படித்து வந்தான்.

ஒருநாள் விடுமுறை விளையாண்டு கொண்டு இருக்கும்போது நல்ல பாம்பும், சாரை பாம்பும் ஆடிக்கொண்டு இருந்திருக்கிறது.

அதைப் பார்த்த ராசு கல்லை எடுத்து அதன் மேல் போட, நல்ல பாம்பு உடம்பில் பட்டுவிட்டது.

அடிபட்ட பாம்பு பக்கத்தில் இருந்த கரையான் புற்றில் சென்று மறைந்து விட்டது.

வீட்டிற்கு வந்த ராசு பாம்பை அடிக்க கல்லை பாம்பின் மீது போட்டேன். பாம்பு பக்கத்தில் இருந்த புற்றிற்குள் போய்விட்டது என்று சொன்னான் விளையாட்டுத் தனமாக…

பாம்பை எதற்கு அடித்தாய் என்று திட்டிய அண்ணன். இது போல் விஷப்பாம்பிடம் விளையாடாதே! என்று கூறினார்.

காலையில் அவன் பள்ளிக்கூடம் போய்விட்டான். அவன் அண்ணி தண்ணீர் எடுக்க குடத்தை எடுக்க, அதன் பக்கத்தில் பாம்பு இருந்தது. அதைப் பார்த்து பயந்து போய் கர்த்தினாள்.

பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கட்டையை வைத்து பாம்பை அடித்து புதைத்து, பால் ஊற்றினார்கள்.

அடிபட்ட பாம்பு அடித்தவனை தேடி வரும் என்பார்கள். உண்மையில் அவனைத் தேடி வந்த பாம்பு தடம் மணலில் நெளிந்து நெளிந்து   இருந்ததையும் அவன் வீட்டுக்கு வந்ததையும் கண்ட எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.

இனியும் உயிருடன் விட்டால் அந்தப் பாம்பு அவனைக் கடித்தாலும் கடிக்க வரும் என்று தான் அந்தப் பாம்பை அடித்தார்கள்.

எனவே, விஷப் பாம்புடன் விளையாடவோ, அடிக்கவோ கூடாது என்பதை ஔவையாரும் “அரவ மாட்டேல்” என்று கூறியிருக்கிறார்.

Share.

Leave A Reply