23-மண்பறித் துண்ணேல்

இரண்டு அண்ணன், ஒரு அக்கா என மூன்று பேருடன் பிறந்தார் ரமணன். நல்ல உழைப்பாளி.

அவன் தொட்டது எல்லாம் உயர்ந்தது. கட்டிடமாக, வெல்டிங் கம்பெனியாக…

அவன் ஒருவனால் பார்க்க முடியாது என்பதால் தனது அண்ணன்கள், அக்கா குடும்பம் என பார்த்துக் கொள்ளச் சொன்னான்.

அவர்கள் உடன் பிறந்தவர்கள் என்ற நம்பிக்கையில்.

அவர்களும் அந்த இடத்தில் இருந்து பார்த்துக் கொண்டதுடன், சம்பளமாக பணமும் பெற்றுக் கொண்டனர்.

ஒரு நாள் திடீரென்று நெஞ்சு வலி வந்து தம்பி ரமணன் இறந்துவிட்டான்.

அவன் மனைவி, மகன், மகள் என குடும்பமே நிலை குலைந்து  போய் விட்டது.

அவர்களுக்கு பக்க பலமாக ஆறுதலாக இருக்க வேண்டிய உறவினர்கள்.

அவர்…அவர்களுக்கு கிடைத்தால் போதும் என்று அவர்கள் பார்த்துக் கொண்டு இருந்த கம்பெனிகளை தங்களுக்குச் சொந்தம் என சொந்தம் கொண்டாடினார்கள்.

ரமணன் மனைவி, குழந்தைகள் செய்வது அறியாது கண்ணீர் வடித்தனர்.

இதுபோன்ற பிறர் நிலத்தை அபகரிப்பவர்களைப் பார்த்த ஔவையார் “மண்பறித் துண்ணேல்” என்று பாடிச் சென்று இருக்கிறார்.

Share.

Leave A Reply