22-பருவத்தே பயிர்செய்
ஐப்பசி மாதம் பிறந்த உடன் விவசாயிகள் வயலில் உழுது நெல் விதைக்க ஆரம்பித்து விட்டனர்.
வேறு சிலர் மஞ்சள், கிழங்கு, கரும்பு இப்படி பயிர் செய்ய அதற்கான வேலைகளில் இயங்கிக் கொண்டு இருந்தார்கள்.
இந்தப் பருவத்தில் செய்யத் தொடங்கினால்தான் தை மாதம் அறுவடைக்கு தயாராகிய விற்பனைக்கு சந்தைக்குப் போகும். இப்படி திட்டமிட்டு விவசாயிகள் காலத்தைப் பார்த்து பருவத்தில் பயிர் செய்வதால் அவர்கள் லாபம் பார்த்து மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
மகன், மகள் இருந்தால் திருமணம் செய்து கொடுக்க முடியும்.
இளம் வயது ஆண், பெண் இருவருக்கும் உரிய வயதில் திருமணம் செய்து வைப்பதும் பருவம் பார்த்து பயிர் செய்வதற்கு சமம் என்கிறார்கள்.
என்பதை ஔவையாரும் “பருவத்தே பயிர்செய்” என்று சொல்கிறார்.
