21- நன்றி மறவேல்

உயரமான புகை கூண்டில் அணில் ஒரு குட்டி போட்டு வளர்த்து வந்தது.

அணில் குட்டியும் பெரிதாக வளர்ந்து விட்டது.

தாய் அணில் குட்டிக்கு உணவு கொண்டு வர போய்விட்டது.

குட்டி அணில் இங்கும், அங்கும் நடந்து… எட்டிப் பார்த்து விளையாடிக் கொண்டிருந்தது.

எதிர் பாராத விதமாக வீட்டிற்குள் விழுந்து விட்டது அணில். மேலே ஏறப் பார்த்தது.

சமதளமான மதில் சுவர் என்பதால் அணில் குட்டிக்கு ஏற முடியவில்லை.

இதைப் பார்த்த அந்த வீட்டு அம்மா, கதவை திறந்து விட்டு வெளியே போ! அம்மா அணில் உன்னை தேடும் போ என்று சொல்லிவிட்டு போய் விட்டார்கள்.

புரிந்தது போல் அணிலும் வெளியில் சென்று விட்டது.

அம்மா அணிலும், குட்டி அணிலைக் கண்ட சந்தோசத்தில் கொஞ்சி மகிழ்ந்தது.

குட்டி அணில் கம்பி மேல் நின்று கொண்டு சின்னக் குரலில் கீச்.. கீச்…என இனிமையாக கத்தியது.

அந்த சத்தத்தைக் கேட்ட அந்த வீட்டுக்காரம்மா! வெளியில் வந்து எட்டிப் பார்த்தார்கள்.

தாய் அணில் பால்கனி சுவரில் படுத்துக் கொண்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.  

குட்டி அணில் கம்பியில் இரண்டு முன் கால்களையும் தூக்கி சேர்த்து வைத்துக் கொண்டு வணங்குவது போல் உட்கார்ந்து இருந்தது.

அம்மாவிடம் போய் விட்டாயா! என்றவுடன் அதன் சின்ன குரலில் கீச்… கீச்… என நன்றி சொல்வது போல் கத்தியது.

அந்த குட்டி அணிலுக்கு தாயிடம் போக உதவிய அந்த அம்மாவிற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று  எப்படி தெரிந்தது?

அந்தக் காட்சி கண்டு மெய் சிலிர்த்துப் போனாள் அந்த வீட்டுக்கார அம்மா. 

ஔவையாரும் ஒருவர் செய்த உதவியை மறக்கக் கூடாது என்பதற்காக “நன்றி மறவேல்” என்று சொல்லி இருக்கிறார்கள்.

Share.

Leave A Reply