19-இணக்கமறிந் திணங்கு

ஒரு மரத்தின் கிளை, பூ, காய், கனி இப்படி எல்லாமே வெளியில் தெரியும். அதைப் பார்த்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

அந்த மரத்துக்கு ஆதாரமான வேர் பகுதி பூமியில் இருந்து மரம் வளர உதவிக் கொண்டு இருக்கிறது. அது யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. அது போல் தான் நட்பும்.

வெளித் தோற்றத்தை வைத்து அவர்கள் சொல்லும் சொல்லுக்கு மயங்கி தீய நட்புடன் சேர்ந்து வீணாகும் நட்பை விலக்கி விட வேண்டும்.

வேர் போன்ற நட்பை தேர்ந்து எடுக்கும் போது அவர்கள் நம் இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும் நம்மை தாங்கி நம்முடன் இருப்பார்கள். என்பதை ஔவையார் “இணக்கமறிந் திணங்கு”என்று கூறிச் சென்று இருக்கிறார்.

Share.

Leave A Reply