17-ஞயம் படவுரை

பக்கத்து வீட்டு பாட்டு வீடு வீடாகப் போய் உட்கார்ந்து வேண்டாத பேச்சுக்களைப் பேசி நேரத்தை செலவு செய்வார்கள்.

இதனால், வீட்டில் உள்ள செய்திகளை பக்கத்து வீட்டிலும், பக்கத்து வீட்டு விசயங்களை அடுத்தவர்களுக்கும் சொல்வதால்…

சில நேரங்களில் வீட்டில் திட்டு வாங்கிக் கொண்டும். சண்டை போட்டுக் கொண்டும் இருக்கும் அந்தப் பாட்டியிடம்…

ஏன் பாட்டு! வீட்டுப் பிரச்சனைகளை வெளியில் சொல்வதால் தானே உங்க வீட்டில் சண்டை வருகிறது. இனி சொல்லாதீர்கள், அமைதியாக இருங்கள். வயதான காலத்தில் நல்லபடியாக இருக்க அதுதான் உதவும் என்று பக்கத்து வீட்டு மணி சொல்வதைக் கேட்ட பாட்டி.

ஆமம் கண்ணு! என் மேலேயும்  தப்பு இருக்கிறது. இனி வீட்டு விவரங்களைப் பேச மாட்டேன் என்றார்கள் அந்தப் பாட்டி.

இனிமையாகப் பேசிய மணி. பாட்டியின் செயலைச் சுட்டிக்காட்டி உணர வைத்தார்கள். இதைத்தான் ஔவையார் பாட்டி ‘ஞயம் படவுரை’ என்கிறார்.

Share.

Leave A Reply