16-சனி நீராடு
சனிக்கிழமை! பள்ளி விடுமுறை. மகனை அழைத்து அவன் உச்சியில் நல்லெண்ணையை தேய்த்து, உடல் முழுவதும், கை, கால் என தேய்த்து விட்ட அம்மாவைப் பார்…
ஏன்? எண்ணைய் தேய்த்து குளிக்க வேண்டும்? எனக் கேட்க…
அம்மா சொன்னார்கள்!
தலை உச்சியில் வெப்பம் தாக்கம் குறையவும், உடல் சூடு குறையவும், உடலில் உள்ள அழுக்கு கிருமிகள் வெளியேறவும் குளிக்கிறோம். சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் குளித்தால் உடலுக்கு ஆரோக்கியம் என்பதை நமக்கு வழி வழியாகச் சொல்லிக் கொடுத்ததை ஔவைப் பாட்டியும் ‘சனி நீராடு’ என்று சொல்கிறார் என்றார் அம்மா.
தன் கேள்விக்கு பதில் கிடைத்த சந்தோசத்துடன் குளிக்கச் சென்றான் ரவி.
