முன்கதை சுருக்கம்
.

நகரத்தில் வசிக்கும் சரவணன் தன் மகன்கள் இராஜா, ரகு, கிராமத்தில் ஆகியோருடன் தங்கி கிராமத்தில் இருந்த போது அங்குள்ள ஒரு மலைக்கு செல்கிறார்கள். அந்த மலையில் புதையல் இருப்பதாக அந்த கிராம மக்கள் கதை கதையாக சொல்கிறார்கள் . அந்தமலையில் பல ரகசியங்கள் அடங்கியிருப்பதை தெரிந்து கொள்கிறார்கள் அதை தெரிந்து கொள்ளும் அவர்கள் . அவற்றை வெளிக்கொணர முயற்சிக்கிறார்கள். மலையில் புதையல் வைப்பதற்காக மலையைக் குடைந்து உள்ளே பல பொருட்களை வைத்து இருக்கிறார்கள். ஆனால் அதற்கு உள்ளே செல்வதற்கான வழியை அவர்கள் கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். . .

உடனடியாக முத்துச்சாமி ஆட்டுக்கார அமாவாசை அனைவரும் அங்கு வந்து உள்ளே பார்த்தனர். பாதை கொஞ்சம் குறுகலாகவே இருந்தது. உடனே ஒரு ஆள் நுழைவதற்கும் பொருட்களை தூக்கிச் செல்வதற்கும் போதுமான அளவே இருந்தது.பல ஆண்டுகளாக அந்த குகை போன்ற இடம் மூடிக்கிடந்ததால் ஒரு விதமான வெப்பக்காற்று வெளிவந்தது .


அதன் பின்னர் அங்குள்ள தைரியசாலியான,திடகாத்திரமான ஒருவரை தீப்பந்தத்துடன் உள்ளே போகச் சொல்வது என்று முடிவுடன் ,அவர்கள் மாரியப்பனை கூப்பிட்டு ,குகைப்பகுதிக்குள் அனுப்ப முடிவு செய்தனர்.


மாரியப்பனைக் கூப்பிட்டு உள்ளே தீப் பந்தத்துடன் அனுப்பி வைத்தனர். உள்ளே சென்றுசுற்றும் முற்றும் பார்த்த மாரியப்பன் சற்று நேரம் கழித்து அவர்களைப் பார்த்து அனைவரையும் உள்ளே வரும்படி கூறினான்.. உடனே கல் மூக்கன் ,கொல்ல ஆறுமுகம்,, முத்துச்சாமி ஆட்டுக்கார அமாவாசை நான்குபேரும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே சென்றனர்.


அங்கே தீபந்த ஒளியில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது .. அந்த மூட்டைகளில் ஒன்றை அவிழ்த்துப் பார்த்தனர். அதில் பலவிதமான ஆபரணங்கள் ,தங்கக் காசுகள் இருந்தன.அவற்றைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர் .


உடனே முத்துச்சாமி அனைவரிடமும் இதுபற்றி இப்போது ஒருவரிடமும் ஒன்றும் சொல்ல வேண்டாம்.இது அரசுக்குசொந்தமான பொருள்கள் உடனடியாக அருகில் உள்ள உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கும் வரை வெளியில் சொல்ல வேண்டாம் என்று அனைவரிடமும் கூறினார் . அனைவரும் ‘சரி’ என்று தலையாட்டினர்.


அதன் பின்னர் அனைவரும் வெளியில் வந்தனர். இருந்த போதிலும் இவற்றை உள்ளே கொண்டு செல்வதற்கான வழிமட்டும் அவர்களுக்கு இன்னும் புலப்படவில்லை கல் மூக்கன் ,கொல்ல ஆறுமுகம்,, முத்துச்சாமி ஆட்டுக்கார அமாவாசை ஆகியோரை அங்கே இருக்கும்படி சொல்லிவிட்டு முத்துச்சாமி மற்றும் சிலர் மட்டும் கிராமத்துக்கு புறப்பட்டனர்.


கல் மூக்கன் , கொல்ல ஆறுமுகம் ஆகியோரை பார்த்து தான் திரும்பி வரும் வரையில் அங்கே இருக்கும்படி சொல்லிவிட்டு சென்றார் முத்துசாமி.


கொல்ல ஆறுமுகமும் , கல் மூக்கனும் மட்டும் இதற்கு உள்ளே செல்வதற்கான வழிகள் ஏதும் புலப்படுகிறதா என்று மலையின் பக்கவாட்டுப் பகுதியில் பார்த்துக் கொண்டு இருந்தனர்,..


இந்தமலையை பாதுகாப்பாக பொருள்களை வைக்க தேர்ந்து எடுத்தவர்கள் எதிர்காலத்தில் இதை எளிதாக உடைத்து உள்ளே செல்லமுடியாதவாறு கவனமாக வேறு வழிகளை வைத்துள்ளது மட்டும் புரிந்தது ./ சாதாரணமாக பார்த்தவுடன் எளிதாக கண்டுபிடிக்க முடியாதபடி அந்த வழிகள் ஏற்பாடு செய்துஇருக்க வேண்டும்

.
மலையின் பக்க வாட்டு பகுதிகளை மிகுந்த கவனத்துடன் கொல்ல ஆறுமுகம், கல் மூக்கன் ஆகியோர் பார்த்தபோது இவர்கள் இருந்த இடத்தில் இருந்து இடது புறம் ஒரு பெரிய பாறை தனியாக மலையுடன் சேர்த்து வைத்தது போன்று தோன்றியது. வழக்கமாக மலை வெடிப்புகளில் தோன்றும் செடிகள் ஏதும் அங்குஇல்லை. அந்த இடத்தின் முன்பகுதியில் மாட்டும் பல ஆண்டுகள் ஆனதால் சில மரங்கள் வளர்ந்திருந்தன.


மலைப்பாதையை தெரியாதபடி அந்த மரங்கள் இருக்கலாம் என்று இருவருக்கும் திடீர் என்று சந்தேகம் தோன்றியது.. அங்கிருந்து ஒரு நூறு அடி தூரம் சென்று அந்த பக்கவாட்டு திசையைப் பார்த்தனர். அப்போது வானவில் போன்ற அமைப்பில் மலையின் பக்கவாட்டு சுவர் போல் இருப்பது போன்று காட்சி அளித்தது.


உடனே கொல்ல ஆறுமுகமும், கல் மூக்கனும் மட்டும் மாரியப்பனை அங்கே இருக்கச் சொல்லிவிட்டு தீப்பந்தத்துடன் குகை போன்ற பகுதிக்குள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் குகை போன்ற பகுதிக்குள் ஒவ்வொரு இடமாக வெளிச்சத்தில் துல்லியமாக பார்த்துக் கொண்டும் கல் மூக்கன் ஆங்காங்கே உளியில் தட்டிக்கொண்டும் வந்தார்.


அப்போது தீபந்த வெளிச்சத்தில் ஓரிடத்தில் மலைச் சுவற்றின் மேல் பகுதியில் இருந்து தண்ணீர் வந்ததற்கான அடையாளம் காணப்பட்டது . வழக்கமாக ஒரே மலையாக இருக்கும் பகுதியில் இடைவெளி இருக்காது மலையின் மேல் பகுதியில் மழை பெய்தாலும் தண்ணீர் உள்ளே இறங்காது. கல் மூக்கன் மலையில் நீரோட்டம் இருக்கும் கல்லைப்பார்த்தவுடன் அதன் தன்மைகள் பற்றி அறிந்து கொண்டார்.


அவர் உடனே கொல்ல ஆறுமுகத்தை அழைத்து அந்த தண்ணீர் வழிந்தோடிய இடத்தை காண்பித்து ஆலோசனை செய்தார். அவரும் ”ஆமாம் அப்படியும் இருக்கலாம் , எதற்கும் மலையின் மேல் பகுதிக்கு சென்று அங்கிருந்து இரும்பு கம்பியை நுழைத்துப் பார்த்தால் உண்மை தெரிந்து விடும்” என்று தெரிவித்தார்.


உடனே இருவரும் குகைப் பகுதியின் வெளிப்பகுதிக்கு வந்தனர். உள்ளே இருந்ததில் சுத்தமான காற்றில்லாமல் ஒருவித துர்வாடை அவர்களை திக்கு முக்காடச் செய்தது .
இதற்கிடையில் கிராமத்துக்குச் சென்ற முத்துச்சாமி அங்குள்ள சில முக்கியமானவர்களுடன் ஆலோசனை நடத்தி மலைக்கோட்டையில் பார்த்த விவரங்களை குறித்துப் பேசினார்.இதை உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்து அங்கிருந்து மாட்டு வண்டியில் புறப்பட்டனர்.

தொடரும்

Share.

Leave A Reply