சித்த வைத்தியம் சிக்கன மருத்துவம்
தேங்காய்–63
முற்றிய தேங்காய் முக்கண் உடையது .இறைவனுக்கு உடைப்பது கும்பமாக வைத்து இறைவனை வழிபட்டு உடைக்கும் போது மிகுந்த மன அமைதி கிடைக்கும் .
பச்சையாக பறித்தால் இளநீர் . இளநீர் உடல் வெப்பத்தை தணிக்கும். வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.
கோடை காலத்தில் அம்மை போட்டவர்களுக்கு வாய்ப்புண் ஏற்பட்டு உணவு உண்ண முடியாது .அவர்களுக்கு இளநீர் கொடுத்து வர வாய், வயிற்றுப் புண்கள் குணமாகி வெப்பம் குறைந்து விரைவில் அம்மை இறங்கி விடும் .
‘இளநீர்’ கோவில்களில் அபிசேகப் பொருளாகப் பயன்படுகிறது
உடலில் உள்ள வெப்பத்தை குறைப்பதால் இளநீர் அருந்துபவர்கள் தோல் மேன்மை ஆகும்.
இளநீரில் வைட்டமின் சத்துக்கள் உண்டு. இளநீரில் கலோரி சத்து குறைவாக இருப்பதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது.
குடல்புண் ஏற்பட்டு உணவு சீரணம் ஆகாமல் இருப்பவர்கள், நாள்தோறும் இளநீர் அருந்தி வர புண் குணமாகி உணவு உண்ண முடியும்.
கடல் மண் சார்ந்த பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகமாக வளர்க்கப்படுகிறது. தேங்காயும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது .அதன் பயன்பாடு அதிகமாகவே உள்ளது .
தேங்காயில் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, கலோரி நிறைந்துள்ளது.
தேங்காய் பால் எடுத்து ஆப்பம், பால் பணியாரம், பால் கொழுக்கட்டை , சாதம் இவற்றில் சேர்த்து சாப்பிடுவதால் வாய்ப்புண் , வயிற்று புண்கள் நம்மை நெருங்கவே செய்யாது, நோய் எதிர்ப்புச சத்து அதிகரிக்கும் .
சூட்டுக்கு சூடு தணியும் அதாவது உடல் சூட்டுக்கு தேங்காய் பால் குடித்து வர சூட்டு உடம்புக்கு தேங்காய் பால் சூடு தனித்து குளிர்ச்சியாக்கிவிடும். மெலிந்து இருப்பவர்கள் கூட சதை பிடிப்பாக வந்து விடுவார்கள்.
தேங்காய் முற்றிய கொப்பரையில் இருந்து தேங்காய் எண்ணெய்எடுக்கிறார்கள்.வாய்ப்புண், தீப்புண் , காயங்கள் இவற்றிற்கு தேங்காய் எண்ணெய் தடவினால் குணமாகும்.
கொப்பரை தேங்காயை அரைத்து தலையில் தடவி 1/2 மணி நேரம் சென்றபின் குளித்து வர முடி செம்பட்டை போய் கருகரு என முடி வளரும் .
தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை சேர்த்து இளஞ்சூடாக்கி நெஞ்சு சளி உள்ள குழந்தைகளுக்கு போட்டுவிட்டால் சளி இளகி மூச்சு திணறல் வராமல் சுவாசிக்க முடியும். சளியும் குணமாகும் .
பனி காலங்களில் உதட்டில் வெடிப்பு உண்டாகும். கை கால்கள், தோல் குளிர் தாங்காமல் சுருக்கம் போல் இருக்கும் இவற்றிற்கு தேங்காய் எண்ணெய் போட உதட்டு வெடிப்பு குணமாகும். கை, கால்கள் தோல் பளபளப்பாக இருக்கும்.
விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைக்கவும், கோவில்களில் வழிபாட்டுமுக்கிய பொருளாகவும் பயன்படுகிறது.வழிபட்டு வந்த உடன் பிரசாதமாக தேங்காயை சாப்பிடக் கொடுப்பார்கள்.தேங்காய் சாப்பிடும் பழக்கம் நன்மை தரும் என்பதால் அப்படி சாப்பிடக் கொடுத்து இருக்கிறார்கள் நம் மூதாதைகள் .
தேங்காயை பல்லில் மென்று சாப்பிடும் போது பல் உறுதியாகிறது .பால் சத்து எளுறுக்கு வலு சேர்க்கிறது .
இந்திய உணவில் தேங்காய் இல்லாத சமையலே இல்லை என்று கூறலாம்.
நாள்தோறும் தேங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் நம்மை அறியாமலே நமது உடல் வெப்பத்தை குறைக்கும் மருந்தை பயன்படுத்துகிறோம், .
தேங்காய் பன், தேங்காய் பர்பி, தேங்காய் மிட்டாய் குழந்தைகளுக்கு பிடித்தவை. வீட்டில் செய்வது வழக்கமாக உள்ளது .
நெருப்புப் புண் ஏற்பட்டாலும், அடிபட்ட புண் ஏற்பட்டாலும் தேங்காய் எண்ணெய் தடவி வர புண் ஆறும், தளும்பும் போக்கும் தன்மை கொண்டது தேங்காய் எண்ணெய்.
தென்னம் பிள்ளை
காலைக் கதிரவன் வானிலே
பறவை ஓசை காதிலே
கண் விழித்துப் பார்க்கையில்
புன்னகை சிந்தும் மலர்களே /
அன்னைப் பசு மடுவிலே
பால் தருவாள் அன்பிலே
வண்ண வண்ண மலரிலே
தேன் எடுக்கும் தேனீயே
பிள்ளை இல்லா வீட்டிலும்
தென்னம் பிள்ளை வளருமே
ஒழுங்கு முறை சொல்லியே
உழைக்கச் சொல்லுது இயற்கையே /
முட்டைக்கோஸ் – 64
மலைப்பிரதேசங்களில் விளையக்கூடியது ஊட்டச்சத்து குறைந்தது, வாயு என்று முட்டைக் கோசை ஒதுக்கி விடுகிறார்கள். புற்றுநோய் வராமல் தடுக்கக் கூடிய சக்தி முட்டைக்கோசுக்கு உண்டு .
வைட்டமின் ‘சி’ சத்து இருப்பதால் புற்றுநோயை எதிர்க்கின்ற தன்மையை உடையது. எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் மார்பு புற்றுநோய் பரவாமல் தடுக்கப்படும்..
மூக்கு , தொண்டை பகுதிகளில் சதை வளரும் .சில சமயங்களில் மீண்டும், மீண்டும் வந்துகொண்டே இருக்கும். இவ்வளர்ச்சியைத் தடுக்கவும் , புண் ஆறவும் முட்டைக்கோஸ் உதவும்.
சூப் தயாரித்து குடித்து வரலாம். வைட்டமின் சி சத்து இருப்பதால் கோசை அதிகம் உணவில் சாப்பிட்டால் காயகற்ப மருந்து போன்று நல்ல பலன்களைத் தரும் .
முட்டைக்கோசை நறுக்கி தேவைக்கு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் குடல்புண் குணமாகும் .
முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வர முகச்சுருக்கம் நீங்கி முகப்பொலிவு ஏற்படும் .
முகத்தில் வறட்சி நீங்கி மென்மைத் தன்மை உண்டாகும் .
முட்டைக்கோசை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் சருமத்தில் வெளி பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும் .
சருமம் பாதிக்கப்படாமல் இருப்பதால் தோல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கப்படும்.
சிறுநீரக கல் உள்ளவர்கள் முட்டைக்கோசை உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது .
அனைத்துக் காய்கறிகளையும் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி நீராவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் .
தக்காளிப் பழம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை , புதினா சேர்த்து வேகவைத்து இறக்கவும் .
சிறிது சீரகம் , மிளகுத்தூள் , உப்புபோட்டு தாளித்து சாப்பிடவும். உடல் நல குறைவு உள்ளவர்கள், குழந்தைகள் சாப்பிட சத்தும் கூடும். உடல் சக்தியும் கூடும் .