3-கர்ப்ப காலத்தில் சில சமாச்சாரங்கள்

கர்ப்பமாக இருக்கும் பெண் தன் கணவனுடன் சந்தோஷமாக இருக்கலாமா? கூடாதா? என்று சந்தேகம் இருக்கும்.

இது குறித்து ஒவ்வொரு பெண்ணும் முழுமையாக தெளிவாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சில பெண்களுக்கு கணவனை கண்டாலே பிடிக்காமல் போகும். அது மிகச் சிலரே! கர்ப்பம் உற்ற மூன்று, நான்கு மாதங்களுக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற உடல் பிணிகள் இருக்கும்.

அதனால், பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மயக்கமாக இருக்கிறது, எழுந்தால் தலை சுற்றுகிறது.என படத்துக் கிடந்தால் சோம்பல் அதிகரிக்கும்.

எழுந்து நமது வேலைகளை செய்வதே கடினமாகத் தோன்றும். எழுந்து குளித்து விட்டீர்கள் என்றால் சோர்வு போய் சுறுசுறுப்பு உண்டாகும்.

உங்கள் வேலைகளை வழக்கமாக செய்யலாம். வாந்தி வருகிறது .என்று சாப்பிடாமல் இருந்து விடக்கூடாது. அதனால், உடல் சோர் அதிகரிக்கும். ஆரஞ்சு மிட்டாய், இழந்த மிட்டாய், இவற்றை வாயில் போட்டு சப்பி கொண்டே இருந்தால் வாந்தி வராமல் இருப்பதை தடுக்கலாம். மாங்காய் சாப்பிடுவதாலும் வாந்தி வருவது நிற்கும்.

தொடர்ந்து வாந்தி வந்தால் குழந்தை வளர்ச்சியிலும் பாதிப்பு உண்டாகும். எனவே, மருத்துவரிடம் காட்டி வாந்தி வராமல் இருக்க டானிக், மாத்திரை வாங்கி சாப்பிட்டு வாந்தி வருவதை குறைத்து சோர்வின்றி இருக்கலாம்.

கர்ப்பமுள்ள பெண் கணவனுடன் சந்தோஷமாக இருக்க தடை இல்லை. அவ்வாறு இருக்கும் போது வயிற்று பகுதியில் அதிக அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  என்பதுதான் முக்கியம்.

கற்பம் உள்ள பெண் உருண்டு, புரண்டு படுக்கக் கூடாது. அவ்வாறு படுப்பதால் குழந்தையின் உடலில் கொடி சுற்றிக்கொள்ள ஏதுவாகும்.

குழந்தையின் சுவாசப் பகுதியில் கொடி சுற்றினால் குழந்தை வயிற்றுக்குள் இறப்பதற்கும் சந்தர்ப்பமாகிவிடும்.

எனவே, கர்ப்பிணிப் பெண்கள் மிக மெதுவாகத் திரும்பி படுக்க வேண்டும். அல்லது எழுந்து திரும்பி படுக்க வேண்டும்.

அவ்வாறு மென்மையாக திரும்பி படுப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். கர்ப்பப்பை நல்ல முறையில் இருக்கும்.

பெண்கள் பத்து மாதம் வரை குழந்தை பிறக்கும் வரை வேலையும் செய்யலாம் கணவனுடன் சந்தோஷமாகவும் இருக்கலாம்.

அவ்வாறு இருப்பதால் பெண்ணின் ஆசனப் பகுதி சுருங்கி விரிவதால் குழந்தை பிறக்க ஏதுவாகும்.
   
                     -தொடர் வளரும்.

Share.

Leave A Reply