7-கர்ப்பிணி பெண்களும், உணவுப் பழக்கமும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒருவராக இருப்பது இல்லை. குழந்தையும் சுமப்பதால் குழந்தைக்கு வேண்டிய உணவை உட்கொள்ள வேண்டும்.

  இரண்டு பேர் சாப்பிடும் உணவை ஒருவரே சாப்பிட வேண்டும் என்பதா? இல்லை, சிறிதளவு சாப்பிட்டாலும் சத்தான உணவை சாப்பிடுவது அவசியம்.

சத்துள்ள உணவு என்றால் விலை அதிகமாக இருக்கும் அதை எப்படி வாங்கி சாப்பிடுவது என நினைப்பது தவறு. கர்ப்ப காலத்தில் மிகவும் தேவையானது இரும்புச்சத்து அது பருப்பு, கீரை ,முட்டை போன்றவற்றில் உள்ளது.

கால்சியம் பாஸ்பரஸ் சத்துக்கள் உணவில் இடம்பெற வேண்டும். குழந்தையின் பல், எலும்பு போன்ற வளர்ச்சிக்கு இது பெரிதும் வேண்டியுள்ளது.

மீன், முட்டை, பால், இறைச்சி இவற்றில் கால்சியம் அதிக அளவு உள்ளது.

சைவ, உணவு உட்கொள்பவர்கள் பால், நெய், வெண்ணெய், சூப் போன்றவற்றை… சாப்பிடலாம் 25 மில்லி பாலில் இருந்து 30 கிராம் எண்ணெயிலிருந்து 75  மில்லி கிராம் வைட்டமின் ‘ஏ’ கிடைக்கிறது. கடலை, உளுந்து, பயிறு வகைகள், கீரை, பழம் இவற்றை சாப்பிட வேண்டிய அளவு சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும்.

மேலும், இவ்வாறு உணவுகளும் வாங்க இயலாத பெண்கள் பலர் வெற்றிலையை போட்டு வாயில் அடைத்துக் கொண்டே இருப்பார்கள்.

அப்படி உள்ள பெண்களுக்கு எவ்வாறு ஆரோக்கியமாக குழந்தை பிறக்கிறது நம்மில் பலர் நினைக்கலாம்.

வெற்றிலை, பாக்கு போடுபவர்கள் அந்த சுண்ணாம்பில் கால்சியம் சத்து உள்ளதால். அவர்களுக்கு தேவையான அளவு பால் சாப்பிட்டதற்கு சமமான சத்து கிடைத்து விடுகிறது.

வழக்கமாக நாம் சாப்பிடும் சோறு, சப்பாத்தி காய்கறிகளிலே தேவையான சத்துக்கள் உள்ளன. இவற்றை ஒழுங்காக சாப்பிட்டாலே குழந்தைகளுக்கு வேண்டிய புரோட்டின், வைட்டமின் தாது சத்துக்கள் கிடைத்துவிடும். 60மி. கிராம் இரும்புச்சத்தும் 500 மில்லி கிராம்பு போலி ஆசிட் சத்தம். 2500 கலோரி புரோட்டீனும் தேவைப்படுகிறது. நமது உணவில் 100 கிராம் புரோட்டின் உள்ளது.

கர்ப்பிணி பெண்கள் 56 கிராம் புரோட்டின் உணவு அதிகம் சாப்பிட வேண்டும். என்று உலக ஆரோக்கிய அமைப்பு கூறுகிறது.

புரோட்டின் குறைவு ஏற்படும் போது குழந்தையின் தோல், நகம், முடி போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது. மூளை வளர்ச்சி குறைவு உடல் ஊனங்கள் போன்றவற்றிற்கும் புரோட்டின் குறைவே காரணமாகும். கர்ப்பிணி பெண்கள் கொழுப்பு நிறைந்த உணவை அதிகம் சாப்பிடக்கூடாது.

கொழுப்பு மிகுந்த உணவை சாப்பிடுவதால் ‘கொலஸ்ட்ரால்’ அளவு கூடிவிடும். ‘பால்’ அதன் மூலம் தயாரிக்கும் கேக், பிஸ்கட்கள், இனிப்பு பலகாரங்கள் அதிக அளவில் சாப்பிட்டாலும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் குழந்தை பிறக்க அதில் கடினமாகிவிடும். எனவே, தேவைக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.

நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் சேர்த்துக் கொள்வது நல்லது.  பூசணிக்காய், சுரைக்காய் போன்ற காய்கள் சாப்பிடுவதால் (யூரின்) சிறுநீர் நன்றாக போகும்.

‘கால்’ வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம். மேலும், பார்லி அரிசியை தண்ணீரில் ஊற்றி வேக வைத்து ஆறியபின் தண்ணீரை குடித்து வர சிறுநீர் நன்றாகப் போகும். கர்ப்பிணி பெண்கள் முக்கியமாக மலச்சிக்கல் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மலச்சிக்கல் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பது கடினமாக இருக்கும். எனவே, தினமும் இரவில் பழம் சாப்பிடுவது நல்லது.


சிறிதளவு சீரகத்தை எடுத்து ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் ஊற்றி வேக விட வேண்டும். அரை டம்ளர் அளவு தண்ணீர் வற்றிய பின் வடிகட்டி அதில் ஒரு ஸ்பூன் அளவு வெண்ணெய் போட்டு கலக்கி குடித்து வர மலச்சிக்கல் ஏற்படாது.

பப்பாளி பழம், அண்ணாச்சி பழம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

சில பெண்கள் பழத்தை சாப்பிட்டால் எதுவும் ஆகாது. சில பெண்கள் சாப்பிட்ட பின் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. எனவே, முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது.

கர்ப்பிணி பெண்கள் உணவு உண்டவுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது. உடனே படுப்பதால் உணவு ஜீரணிக்காமல் வாந்தி வர ஏதுவாகிவிடும்.

சிறிது நேரம் நடந்த பின் படுக்கச் செல்வது நலம் தரும்.

Share.

Leave A Reply