6-கர்ப்ப காலத்தில்  கருச் சிதைவு ஏற்படாமல் இருக்க !

கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க அதிக தூரம் பயணிப்பது கூடாது.

அதிக பளுவான பொருட்களை தூக்குவதை நிறுத்தி விட வேண்டும்.

திருவிழா, சுற்றுலா செல்லுதல் கூட்டமான தியேட்டர்களுக்கு செல்வது இவற்றை தடுப்பது நல்லது.

அவ்வாறு செல்லும் போது விஷக்கிருமிகள் கூடும் நோய் ஏற்பட்டு நுண்கிருமிகள் கர்ப்பப்பை கலைக்கும் தன்மையை உருவாக்கும். எனவே, நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கர்ப்பிணிகளுக்கு மலேரியா காய்ச்சல் வைரஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் அதிக கவனம் தேவை கர்ப்பம் கலையும் சூழ்நிலை உண்டாகும்.

ஊனமுற்ற குழந்தைகள் பிறக்க ஏதுவாகும். வயிற்றிலேயே குழந்தை இறந்து விடும் நிலையும் ஏற்படும். எனவே, காய்ச்சல் கர்ப்ப காலத்தில் அதிகமாக ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மதுபானம் அருந்துதல், புகைப்பிடித்தல், போதைப்பொருள் உட்கொள்ளுதல் போன்றவைகளாலும் கருக்கலையவும் வாய்ப்பு உள்ளது.

கற்பம் தரித்த முதல் மூன்று நான்கு மாதங்கள் குழந்தை உருவாகும் காலம் என்பதால் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் உடையில் ரத்தப்போக்கு கண்டால் உடனே மருத்துவரிடம் காட்ட வேண்டும்.

பிறகு காண்பிப்போம் என இருக்கக் கூடாது. நமது அசாக்கிரதையால். தாய், சேய் இருவருக்கும் ஆபத்து உருவாகும் சூழ்நிலை உண்டாகும் .எனவே, ரத்தப்போக்கு சிறிதளவு கண்டாலும். உடனே, மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெறுவது அவசியம்.

ஒரு முறை கருச்சிதைவு ஆகிவிட்டது என்றால் கர்ப்பப்பை வீக்காகிவிடும். எனவே, உடனே கர்ப்பம் தரிப்பது கூடாது.

குறைந்தது ஆறு மாத இடைவெளியாவது இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தை ஆரோக்கியமாக வளர முடியும்.

அடிக்கடி கருச்சிதைவு ஆகும் பெண்களுக்கு உடலும், உள்ளமும் பலகினம் ஆகிவிடும்.

ஒரு முறை கருச்சிதைவு ஆகி விட்டால் மிகுந்த எச்சரிக்கையுடன் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து நல்ல குழந்தையை பெற்றெடுப்போம் என்ற மன தைரியத்தில் இருந்தால் குழந்தை நல்ல முறையில் பிறக்கும்.

Share.

Leave A Reply