24-பெண் கல்வி
பெண்கள் தன்னைக் காத்துக் கொள்வதுடன் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பெண் கல்வி கற்பதன் நோக்கமே தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கே, அப்படி இருக்க தன்னம்பிக்கை மிக வேண்டிய இடத்தில் தோல்வி என்ற அவ நம்பிக்கையை ஏன் சுமக்க வேண்டும்.
கல்லூரிகளுக்குச் செல்லும் வயது உணர்வுகளை தூண்டும் வயது. பருவத்தில் நாம் நம்மை ஒரு முகப்படுத்தி விட்டால் அப் பருவத்தில் எதுவும் நம்மை பாதிக்காது.
எப்படிப்பட்ட ஆடவருடனும் எளிதாக பழகி வரலாம். பெண்கள் சக்தியின் உருவம். அவர்கள் சாதிக்க பிறந்தவர்கள். சந்தனம் போல் மணக்க பிறந்தவர்கள். என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டால் பெண்கள் ஒருபோதும் சாக்கடையாக மாட்டார்கள். சந்தனமாக மனப்பார்கள். எப்படி என்றால்….
“
சாதம் படைத்தவள் சாதனை படைக்கிறாள்
சோறு ஊட்டியவள் கார் ஓட்டுகிறார்.
விட்டத்தைப் பார்த்தவள் விண்கலத்தில் பறக்கிறாள் அடுப்பு ஊதியவள் ஆட்டோ ஓட்டுகிறார்
பட்டன் தைத்தவள் பட்டம் வாங்குகிறாள்.
காபி போட்டவன் கணினியை இயக்குகிறாள் வீதியை பார்த்தவள் விஞ்ஞானி ஆகிறாள்
மோர் கடைந்தவள் போர் செய்கிறாள்”
இப்படி எல்லாம் இவர்கள் சாதிக்க வேண்டும் என்றால்…
“காலங்களே மாறினாற் போல
கோலங்களும், மாறிவிட கண்களிலே கண்ணீர் வேண்டாம்
கனன்றெரியும் தீ வேண்டும் “
என்றால், பிஞ்சுப் பருவம் முதல் பெற்றோர் எதையும் எதிர்நீச்சல் போட்டு வாழ்வில் உயர தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பை ஊக்கப்படுத்த வேண்டும்.எப்படி என்றால்…
“ஊர் எதிர்த்தாலும்
பார் எதிர்த்தாலும்
படை கூட்டிப்பார் விடு வெற்றி
நடை போட்டு காட்டிவிடு”
என்ற வரிகளுக்கு இணங்க பெற்றோரும் வளர்க்க வேண்டும்.
பெற்றோர் பொறுப்புடன் இருந்தால் பிள்ளைகளும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள்.
பருவ வயதில் எப்படி உடல் மாறுதல் ஏற்படுகிறதோ, அதுபோல மாதவிலக்கு நிற்கும் பருவத்திலும் பெண்கள் உடல் மன மாற்றத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
நரை தோன்றும், தோல் சுருங்கும்,முடி உதிரும், நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எட்டிப் பார்க்கும்.
குழந்தைகள் எல்லாம் பெரியோர்கள் ஆகி படிப்பு, திருமணமாகி வேறு இடங்களுக்குச் சென்று விடுவார்கள். உறவுகளின் பிரிவு…
இக்கால கட்டத்தில் மாதவிடாய் நிற்பதற்கு அதிக இரத்தப்போக்கு ஏற்படும். கை,கால் சோர்வு முன்பு போல் இருக்க முடியவில்லையே என்ற மன அழுத்தத்திற்குத் தள்ளிவிடும்.
இக்கால கட்டத்தில் தன்னம்பிக்கையும், மன உறுதியும் மிகமிக அவசியம். வாழ்க்கை என்பது சுழலும் சக்கரம் தான்,
இளமைக்கு பின் முதுமை வருவது இயற்கை. அதை ஏற்றுக்கொள்ளும் மனம் இருந்தால் மரணம் கூட தள்ளிப்போகும்.
முதுமை ஆக… ஆக… நாம் முடங்கி விடக்கூடாது. முதுமை என்பது வயதில் மட்டுமல்ல அறிவில், அனுபவத்தில் முதிர்ச்சி பெற்ற நாம் வளரும் தலைமுறைகளுக்கு வாழ வழிவகுத்துக் கொடுக்கும் வழிகாட்டிகளாக இருந்து பொதுநல சேவை செய்ய முன் வந்தால்…
முதுமை கூட இனிமை ஆகும். வாழ்வின் அர்த்தம் புரியும். ஆனந்தமும், அமைதியும் பெருகும். நிறைந்த வாழ்வு நிலைக்கச் செய்யும்.
இளமை ஆகட்டும் முதுமை ஆகட்டும் நம் மனம் எப்போதும் இளமையாக வைத்துக் கொண்டால்
மனநிறையுடன் எப்போதும் வீரு நடை போடும்.