மகளிர் சிறப்பு கட்டுரை திங்கள் தோறும் படித்து பயனடையுங்கள்.

மகப்பேரின் மகத்துவம்.      
       
          ஆசியுரை

கவிஞர் ச. மல்லிகா தமிழில் அதிக ஆர்வம் கொண்டு பல படைப்புகளை தமிழர்களுக்கு தந்துள்ளார்.

தமிழில் பட்டப்படிப்பு பட்டம் பெற்றதோடு வேறு பல பட்டங்களையும், விருதுகளையும், பெற்றுள்ளார்.

அவர்களுடைய தமிழ் இலக்கியப் பணி மிக பல எழுத்து வடிவாக மட்டுமல்லாமல், வானொலி, தொலைக்காட்சி, பட்டிமன்றத்தில் தெளிவான கருத்துக்களை பரிமாறுதல் செய்வதில் சிறந்த வல்லுனர் ஆவார்.

அவர்களது தமிழ் இலக்கியப் பணிகள் மற்றொரு படைப்பாக வெளிவர உள்ள “மகப்பேரின் மகத்துவம்” அவர்களது சமூக படைப்பின் மற்றொரு மைல்கல் ஆகும்.

  ஏனைய படைப்புகள் போல இப்படைப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.

இப்புத்தகம் பெண்கள் சமூகத்திற்கு மிகவும் பயன் தரக்கூடிய நூலாக அமையும்.

இந்த புத்தகத்தை படிக்கும் ஒவ்வொருவரும் கருத்தரித்தல் முதல் பிரசவத்திற்கு பின்பும் பிறந்த குழந்தை பராமரிப்பு அதற்கு செய்ய வேண்டிய பணிகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொண்டு அதன் மூலம் பயன் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

இவர்கள் இலக்கிய பணி மேலும்… மேலும் தொடர இறைவன் அருள்புரிய வேண்டும்.

                     இவண் திருமதி.கிரிஸ்டி கணபதி     
                          எம்.டி.டிஜி.ஓ 
                 ஷீலா கிளினிக்,    
                          கோவை.


      1-மக்கள் செல்வம்

“பெருமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.”

அதாவது எல்லா பெருமைகளிலும் அறிய வேண்டியவற்றை அறியும் நல்ல மக்களை பெறுவது முதன்மையானது.

மற்ற பெருமைகள் எல்லாம் அதன் பின் தான் என்கிறார் வள்ளுவர். அப்படி பெருமைப்படக்கூடிய மக்கள் பேரைத் தரும் பெண் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றால்!

பெண் பூப்படைந்து நான்கு ஆண்டுகள் சென்ற பின்பே கர்ப்பப்பை வளர்ச்சி அடைகிறது.

அந்த காலகட்டத்தில் தான் தாய்மை அடைவதற்கு தயாராகிறது.

முற்காலத்தில் பெண் பருவ வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்யும் பழக்கம் இருந்தது.

அக்காலகட்டத்தில் பிள்ளை பெரும் இயந்திரமாகவே பெண்கள் இருந்தார்கள்.

அடுத்தடுத்து குழந்தை பெறுவதால் ஆரோக்கியம் கெட்டு இயந்திரத்தனமாக வாழ்ந்தார்கள்.

பல எதிர்ப்புகள், பல போராட்டங்களுக்குப் பின் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு பாலியல் திருமணம் ஒழிக்கப்பட்டது.

பெற்றோர் முடிவு செய்து பெண்ணும், ஆணும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே திருமணம் நடந்த காலம் இருந்தது.

அப்போது பெண்களுக்கு கல்வி அறிவு மறுக்கப்பட்ட காலம். கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு பெண் கல்வி கட்டாயப்படுத்தி பெண்கள் கல்வி கற்ற பின்பு…

தங்களுக்கு தகுந்த மாப்பிள்ளையை யோசித்து முடிவு செய்யும் உரிமையை பெண்கள் எடுக்க ஆரம்பித்தார்கள்.

இதில் ஆதரவும் இருந்தது, எதிர்ப்பும் இருந்தது, பெற்றோர் அமைவதை பொறுத்தது.

கல்லூரி, அலுவலகம் என பெண்கள் செல்லும் இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் அதிகரித்து வருகின்றன.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாற்றம் ஏற்பட்டாலும் குழந்தை பிறப்பு என்பது மாறாத ஒன்று.

ஆண்களை விட பெண்களுக்கு சில சக்திகள் அதிகமாக இருக்கின்றன. ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் பத்து மாதம் முழுமை பெற்ற பிறகு பிறக்கிறார்கள்.

ஆண் குழந்தைகள் எட்டு, ஒன்பது மாதத்தில் கூட பிறந்து விடுகிறார்கள். பத்து மாதம் முழுமையாக இருப்பதில் கூட பொறுமை கிடையாது.

பெண்கள் பத்து மாதம் பொறுமையாக காத்திருந்து பிறக்கிறார்கள். அதனால், அவர்களுக்கு இயற்கை சில சக்திகளை அதிகப்படியாக கொடுத்திருக்கிறது.

பொறுமை, நிதானம், இயற்கையாக இருப்பதால் இவர்களுக்கு முடி கொட்டி வழுக்கை விழுவது இல்லை. விரைவில் முடி நரைப்பதும் இல்லை. இது இறைவன் கொடுத்த கூடுதல்  சக்தியாகும்.

இளநரை சில பெண்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது.

“தாயிற் சிறந்த கோயிலும் இல்லை” என்கிறோம். ஏன்? “தாயை “மட்டும் கோயிலில் உள்ள தெய்வத்திற்கு இணையாக சொல்கிறோம்.

கோயில் கருவறையில் தெய்வம் இருக்கிறது. தெய்வம் மக்கள் நலனுக்காகவே காக்க வல்லது. இறைவன் ஒவ்வொரு வீட்டிலும் கருணை கொண்டு வயிற்றில் கருவாகி கருவறையில் குழந்தையை சுமந்த பெண்ணுக்கு தாய் என்ற பெருமையை கொடுத்து தெய்வம் ஆகி விட்டாள்.

  தாய், தந்தையரை மதிக்கும் பிள்ளைகள். தெய்வத்தை மதிக்கும் பிள்ளைகளாக கருதப்பட்டு அவர்களுக்கு நலனே கிடைக்கிறது.

இவ்வையகத்தில் தாயை வணங்குபவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். தந்தையை வணங்குபவர்களுக்கு ஞானம் கிடைக்கும்.

எனவே, வாழ்வில் ஞானமும், சகல சௌபாக்கியமும் கிடைத்து அமைதியான வாழ்வு அமைய தாய், தந்தையை மதித்து பணிந்து எல்லா நலன்களுடன்  வாழ்வோம்.  
             –  தொடர் வளரும்.

Share.

Leave A Reply