2-நீங்கள் கர்ப்பிணியா?

எங்கோ பிறந்து! எங்கோ வளர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் “திருமணம்” என்ற பந்தத்தை உருவாக்கி உறவு கொள்ள செய்கிறார்கள். 

வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்த இருவரும் “தாம்பத்தியம்” என்ற உறவால் இணைகிறார்கள்.

அவர்கள் தாய், தந்தையரை மறந்து. உற்றார் உறவுகளை மறந்து ஏன் உலகத்தையே மறந்து உனக்கு நான் எனக்கு நீ என்ற நிலையில்.

தங்களையும் மறந்து இன்புற்று இருக்கும் காலகட்டத்தில் ஆணின் விந்துக்கள் பெண்ணின் கருப்பையில் போய் சேர்வதால் ஒரு பெண் கர்ப்பம் அடைகிறாள்.

சில பெண்களுக்கு தான் கர்ப்பவதியான சில நாட்களிலே தெரிந்துவிடும். மாதவிடாய் ஒழுங்காக ஆகாமல் தள்ளி… தள்ளி ஆகும். சிலரால் உடனே தெரிந்து கொள்ள முடியாது.

அவ்வாறு உள்ள பெண்கள் உடனே, டாக்டரிடம் சென்று தான் கர்ப்பம் அடைந்து இருக்கிறோமா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் அசட்டையாக விட்டுவிட்டால் எத்தனை மாதம் என்பதை சொல்வது கஷ்டமாகிவிடும்.

முன்னோ அல்லது பின்னோ தேதியை சொல்லி வைக்க! மருத்துவர் அந்த தேதியை வைத்து பரிசோதிக்க குழந்தைகளுக்கு வளர்ச்சியில் பாதிப்பு உண்டாக்கும்.

முதல் பிரசவம் என்றால் வளைகாப்பு போன்ற விழாக்கள் கொண்டாடும்போது கணக்கு சரியில்லாமல் முன்பே போனால் கணவரை பிரிந்து இருக்கும் சூழ்நிலை உருவாகும்.

இந்த சூழ்நிலையில் குழந்தை பிறக்க கஷ்டமாக இருக்கும். 

நாள் இருக்கிறது என நினைத்து வெளியூர், வெளியிடங்களுக்கு செல்லும்போது குழந்தை பேருந்தில், ரயிலில் இப்படிப்  பொது இடங்களில் பிரசவிக்க நேர்ந்து விடலாம்.

சேரன் போக்குவரத்தில் பிறந்தவள். இவன் திருவள்ளுவர் போக்குவரத்தில் பிறந்தவன் என்று சொல்லும்படி ஆகிவிடும்.

எனவே, மாதவிடாய் நின்ற தேதியை காலண்டர். அல்லது டைரியல் குறித்து வைப்பது நல்லது.

                – தொடர் வளரும்.

Share.

Leave A Reply