ஒரு ஆண் கல்வி கற்றால் அவன் மட்டுமே அறிவாளியாகிறான். ஆனால், ஒரு பெண் கல்வி கற்றால் அவள் பரம்பரையே அறிவாளி ஆகிறது.

ஏனென்றால், ஒரு குழந்தைக்கு முதல் குரு தாய்தான். தன் குழந்தைக்கு எப்படி வாளர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலிருந்து தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கின்றாள்.

முதல் குருவாக இருந்து தந்தையை அறிமுகப்படுத்துகின்றாள். பின் தன் தாய் மொழியாகிய தமிழைக் கற்றுக் கொடுக்கின்றாள்.

பள்ளிக்குச் செல்லும் முன் பாடத்தை கற்றுக் கொடுக்கின்றாள். பள்ளிக்குச் சென்று வந்த குழந்தைக்கு படிப்பைக் கற்றுக் கொடுக்கின்றாள்.

சமையல் முதல் வாழ்க்கைக்கான அத்தனை முறைகளையும் அவள் அடுத்தடுத்து தனது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் அடுத்த வாரிசை உருவாக்குகின்றாள்.

அவள் பாட்டியாலும் தனக்குத் தெரிந்த நல்ல விசயங்களை பேத்தி, பேரன்களுக்கு கண்டிப்பாக சொல்லிக் கொடுக்கிறாள். அப்படி சொல்லிக் கொடுக்கும் போது அடுத்த தலைமுறை நல்ல முறையில் வர பெண் கல்வி அவசியமாகிறது.

இன்று பெண்கள் இல்லாத துறையே இல்லை. எல்லாவற்றிலும் அவர்கள் கால் பதித்து விட்டார்கள். மண்ணிலிருந்து விண் வரை பெண்கள் எல்லா துறைகளிலும் அவர்கள் தங்களைப் பதிவு செய்து விட்டார்கள்.

“மனது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்” “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்” பெண்கள் மனம் எப்போதும் எல்லோர் நலனையுமே எண்ணுவதால் அவர்கள் மனம் அழகாக இருப்பதால் பிறரையும் அவர்கள் எல்லா துறைகளிலும் வல்லவர்களாக்க விரும்புகிறார்கள். அதுவே அவர்களின் என்ன அழகு ஆகும்.

“உளி படாமல் கல் சிலை ஆவதில்லை”பெண்கள் தங்களைத் தாங்களே செதுக்கி கொள்வதோடு மற்றவர்களையும்… செதுக்க அவர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள்.

“நகர்ந்து கொண்டிருப்பது தான் நதிக்கு அழகு” “செயல்பட்டுக் கொண்டிருப்பது தான் மனிதனுக்கு அழகு” நதி தனக்காக மட்டும் ஓடுவதில்லை. நதி ஓடும் இடம் எல்லாம் செழிப்பில் மக்கள் பயன் அடைகிறார்கள்.

மரம் தனக்காக மட்டும் வாழ்வதில்லை .மரம் தன்னை பிறருக்காகவே அர்ப்பணம் செய்து கொள்கிறது .அது போல் தான் பெண்ணும் அவ்வாறே தன்னை மட்டும் அவள் யோசிப்பதில்லை தன்னைச் சார்ந்த குடும்பத்தை உயர்த்தவே எண்ணுவாள்.

பெண் கல்வி கட்டாயம் அவசியம் பெண்கள் படிப்பு அவர்கள் குடும்பத்திற்கே பயன்படுவதுடன். நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் பயன்படுகிறது.

பெண் கல்வியால் வீடும், நாடும் செழிப்படையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. எனவே, பெண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டும். அதுவே, உங்கள் எண்ண அழகை மேம்படுத்தும்.

Share.

Leave A Reply