பெண் மென்மையானவள் மனமும் பூமி போல் உறுதியானது. தாய்போல் சுமந்து பூமி எல்லோரையும் தாங்கிக் கொண்டு அமைதியாக இருக்கிறது. அது போல், பெண்ணும் எத்தனை துன்பங்கள் தனக்கு நேர்ந்தாலும் அமைதியாக தாங்கிக் கொள்வாள்.

துன்பத்தை தாங்கும் சக்தி இருப்பதால்தான் அவள் தாயானால். தாய் போற்றுதலுக்கு உரியவள் பத்து மாத பந்தத்தில் குழந்தையை சுமையாக கருதாமல் சுகமாக கருதி வழி தாங்கி குழந்தையின் முகம் பார்த்து பூரித்துப் போகும் தாயிற்கு இணை எதுவும் இல்லை.

அதனால், தான் தாயை கோயிலாகவும் தந்தையை மந்திரமாகவும் சொல்கிறார்கள்

“தாயிற் சிறந்த கோயிலும் இல்லை!
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.”

தாயில்லாமல் எந்த உயிரும் பிறப்பதில்லை. எனவே, பெண் குலத்தை மதிக்கும் வகையில் தாய்மையைப் போற்றுகின்றனர்.

வரிசையாக பெண் குழந்தையைப் மண் பெற்றுக் கொண்டாள் அவளுக்கு மரியாதை வேறு மாதிரி இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பெண் சிசுவதைகள் நடக்கிறது. தாய் மனம் உவந்து செய்வதில்லை கட்டாயத்தால் மனதை கல்லாக்கிக் கொண்டு செய்கிறாள்.

இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது இன்று….

         “காரணம் கல்வி”
கல்லாமை, இல்லாமை, அறியாமை, முடியாமை, செய்யாமை இந்த ஐந்து ஆமைகளும் பெண்களிடம் இருந்ததால் பெண்கள் அடிமைப்பட்டு கிடந்தார்கள்.

இந்த ஆமைகளை “கல்வி” என்ற மூன்று எழுத்து “ஐந்து ஆமைகளை” விரட்டி விட்டது.

இன்று பெண் கல்வியால் தலை நிமிர்ந்து நிற்கின்றாள். உழைக்கிறாள், உயர்கிறாள், உதவுகிறாள்.

பிறரை எதிர்பார்த்த பெண் பிறருக்கு உதவியாக இன்று இருக்கிறாள். கண்ணீர் சிந்தியவள், கண்ணீர் துடைக்கிறாள்.

சுயமாக சிந்திக்கிறாள், தேனியைப் போல் உழைக்கிறாள். எல்லாத் துறைகளிலும் கால் பதித்து விட்டாள். அவள் செய்யாத பணியே இல்லை. என்ற அளவிற்கு எங்கும் எதிலும் பெண்கள்.

” விலங்குகள் போடாத பெண் அடிமைகள்
உடைத்து எறிந்தோம் புதுமை படைக்க
இன்னும் எத்தனை தடைகள் வந்தாலும்
உடைத்து எறிவோம் உயர்வு கொள்வோம்.

சமையலும் செய்திடுவோம் சாதமும் படைத்திடுவோம் சாதனையும் படைத்திடுவோம் என்று
மண் முதல் விண் வரை எட்டிவிட்டது பெண்ணின் சாதனை.

சாதம் படைத்தவள் சாதனை படைக்கிறாள்
சோறு ஊட்டியவள் கார் ஓட்டுகிறாள்
விட்டத்தைப் பார்த்தவள் விண்கலத்தில் பறக்கிறாள் அடுப்பு ஊதியவள் ஆட்டோ ஓட்டுகிறாள்.

பட்டன் தைத்தவள் ‘பட்டம்’ வாங்குகிறாள்
காப்பி போட்டவள் கணினியை இயக்குகிறாள்
வீதியைப் பார்த்தவள் விஞ்ஞானி ஆகிறாள்
மோர் கடைந்தவள் போர் செய்கிறாள்.”

இப்படி எல்லா துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமைகளை காட்டி முத்திரை பதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சில பெண்களின் உரிமை போர்வையில் தங்களை தாங்களே உயர்த்திக் கொள்கிறார்கள்.

“கல்வியில் புதுமை காட்டி வேலையில் வளர்ச்சி காட்டி அறிவியலில் புரட்சி காட்டி புதுமைப் பெண்ணாய் வளர்கிறார்கள்.

“குப்பை மேட்டில் பெண் சிசு அரசு தொட்டிலில் பெண் சிசு கோயில் வாசலில் பெண் சிசு கள்ளிப் பாலுக்கு பெண் சிசு இதையும் தாண்டித்தான் பெண்கள் இன்று சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

முதியவர்கள் நமக்கு அனுபவ புத்தகங்கள். அவர்களை பாதுகாத்து அரவணைக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது.

” வானத்துப் பெண்ணுக்கு வட்டநிலா பொட்டிட்டு புன்னகையில் பூத்திட
புதுவெள்ளி நீ படைத்தாய் என்று இயற்கையை ரசிக்கின்றாள்.”

“கொடி காத்த குமரன்
தட்டி எழுப்ப பாரதி கப்பலோட்டிய வ.உ.சி தடிபிடித்த காந்தி நேரு நேதாஜி மறக்க முடியுமா இவர்களை கப்பம் கேட்ட ஆங்கிலேயரை கலங்க வைத்த கட்டபொம்மன்”
என நாட்டையும் நேசிக் கின்றாள்.

நம்பிக்கையே நல்லுறமாக துவண்டு போன வள்ளுவரின் திருக்குறளை பொய்கையில் வீசிய ஔவையாரின் நம்பிக்கை”.

அமிர்தம் உண்டவர் அழியாதது போல் தொன்மை மொழி தமிழ் மொழி என்று காத்தவர் ஔவையார் .


மந்திரம், மாயம், தந்திரம், தானம் ,தவம் ,தர்மம், அறம், அன்பு ,பக்தி, விடாமுயற்சி, விட்டுக் கொடுத்தல் இப்படி தன்னம்பிக்கை  ஊட்டும் பல கோணங்களில் வாழ்கிறாள் பெண்.

கடவுள் உண்டு !இல்லை !என்ற விவாதம் எப்போதும் நடந்து கொண்டு இருந்தாலும் சரஸ்வதியை எல்லோரும் விரும்பத்தான் செய்கிறார்கள்.

அம்பாள் லோகநாயகி, சக்தியின் ரூபம், சதுர்புஜ நாயகி, மகா வித்யா, மகாவாணி. பாரதி. வாக் சரஸ்வதி,காமதேனு, பாசதீஸ்வரி என பல பெயர்களில் சத்திய லோகத்தில் காட்சி தந்த சரஸ்வதி இப்பூவுலகில் அவதரித்து பிறந்த காலம் தான் பொற்காலம்.

கீதையில் வரும் “கர்ம யோகம்” என்பது கடமையை செய்வது .இந்தப் பிறவியில் பிறந்த கடமையை செம்மையாக செய்தாலே போதும் பக்தி உள்ளவர், பக்தி இல்லாதவர் என்ற பாகுபாடு எல்லாம் இறைவனுக்கு இல்லை. எனவே ,கடமையை செம்மையாக செய்யுங்கள். இறையருள் தானாகவே கிடைத்துவிடும். இதுவே, கீதையின் சாரமாகும்.

“குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று “எனவே, தான் குழந்தையும் ,தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்றார்கள் பெரியவர்கள்.”

குழந்தைகளை தெய்வத்தின் வடிவமாகப் பார்த்து மகிழ்ந்து குழந்தையாக மாறி மகிழ்கிறாள் பெண்.

பெண்களுக்கு பக்தி, குழந்தை இரண்டும் பிடித்த ஒன்று. இரண்டிலும் கவனம் செய்தாலே வீடும் நாடும் வளமாகும் .

பெண் குலமே நீ வாழ்க!
உன் பெருமையால் வையகம் வளர்க !
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

Share.

Leave A Reply