தமிழர்களின் தனிப்பெரும் விழாவாகவும் அடையாளமாகவும் கொண்டாடப்படுவது பொங்கல் விழாவாகும். வாழ்வின் வழி நெறியாகவும்,உயிர் வாழ்வதற்கான முக்கியத் தொடக்கமாக விளங்குவது பொங்கல் திருநாள் என்றால் மிகையில்லை

தமிழர்கள் வாழ்வில் இரண்டறக்கலந்து விட்ட இத்திருநாள் நான்கு நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் வீட்டில் வைக்கப்படும் பூளைப்பூ (அல்லது ) வேப்பிலை ,மாவிலை வைத்து காப்புக்கட்டுதல் மூலம் விழா தொடங்குகிறது.

போகிப் பண்டிகை என்பது ‘பழையன கழிந்து புதியன புகும்’ நாளாக இது கொண்டாடப்படுகிறது. தேவையற்ற ,பழையபொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். இதே போல நமது மனதில் உள்ள தீய எண்ணங்களையும் எரித்து நல் எண்ணங்களை,சிந்தனைகளை உருவாக்கி கொள்ளும் தொடக்க நாளாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

பொங்கலை கிராமங்களில் தான் இன்னும் சீரும் சிறப்பும் பெருமையும் மிகுந்த விழாவாகக் கொண்டாடுகிறார்கள் .ஆடி ஓடி களைத்த நேரத்தில் அறுவடை முடிந்ததும் பொங்கல் விழாவாவுக்காக புதுப்பானையில் அழகான கோலமிட்டு ,வீட்டு வாசல் முன்பு சூரியதேவனை நோக்கி புத்தரிசி புது வெல்லம் சேர்த்து பொங்கல் வைக்கப்படுகிறது.

அப்போதே நமது பரம்பரியமான காய்கள் அவரை, கத்திரி ,சக்கரவள்ளிக்கிழங்கு ,கருணைக்கிழங்கு போன்றவை சமைக்கப்படுகின்றன.
செழித்து வளர்ந்த மஞ்சளும், செங்கரும்பும்,பனங்கிழங்கு மாவிலை தோரணங்கள் கட்டி வாழை இலையில் வைத்து சூரியதேவனுக்கு படையலிடப்படுகிறது. அதன்பின்னர் உண்ணப்படுகிறது.

நகரங்களில் பல இடங்களில் பொங்கலின் உணர்வும் முக்கியத்துவமும் குறைந்துள்ளது ,சம்பிரதாய விழாவாக மட்டுமே உள்ளன.பணியாளர்களுக்கு அவை விடுமுறைகள் தரும் மகிழ்வு விழாவாக மக்கள் கொண்டாடுகிறார்கள்

பால் உணவு, உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக உள்ள கால்நடைகளுக்கு நன்றி கூறும் நாளே மட்டுப்பொங்கல் விழா ஆகும் . மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி பொங்கலிட்டு அவைகளுக்குப் படைத்து கொடுப்பதே மாட்டுப் பொங்கல் ஆகும்

காணும் பொங்கல்,இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும், உணவுப்பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.இது பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது.

கிராமங்களில் அன்றைய தினம் குப்பிப் பொங்கல் வழக்கத்தில் இருந்து வந்தது . இது இப்போது பலஇடங்களில் குறைந்து விட்டது. இளம் கன்னியர்கள் தங்களது திருமணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று வேண்டுதல் செய்து முளைப்பாரி வளர்த்து கோவில் முன்பு அனைவரும் வரிசையாக பொங்கலிட்டு , தேங்காய் ,பழம் வைத்து இறைவனை வழிபட்டு , கோலாட்டம் , கும்மி அடித்து குளத்தில் இவற்றை அர்ப்பணம்செய்து வந்தனர்.

வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு மற்றும் உலகில் தமிழர்கள் வாழும் என அனைத்து இடங்களிலும் பொங்கல்நாள் மகிழ்வு நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது .அங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது .

Share.

Leave A Reply