செய்யும் தொழிலே தெய்வம்” நாம் எந்த தொழில் செய்தாலும் அந்த தொழிலை முழு மனதுடன் நேசித்து செய்யும் போது அந்த தொழிலே நம்மை உயர்த்தும்.

ஒரு தொழில் செய்யும் போது அதில் ஒரு மூலதனமாக பொருளோ அல்லது உழைப்போ இருக்கும். ஒரு தொழில் செய்ய தொடங்கும் நாம் கவனிக்க வேண்டியது.

அந்த தொழில் உடனே லாபம் தருமா! என்று சிந்திக்க வேண்டும். உடனே லாபம் தரும் என்ற எண்ணம் கொள்ளாது…. பொறுமையாக, நேர்மையாக, உண்மையாகத் தொடர்ந்து உழைக்கும் போது எந்த துறையாக இருந்தாலும் அதில் ஒரு நாள் வெற்றி காண முடியும்.

ஒரு சிறிய தடைகளும் அல்லது துன்பமோ வரும்போது துவண்டு விடக்கூடாது. ஒரு சிறு தோல்வியைக் கூட தாங்க கூடிய மனப்பக்குவம் பலருக்கும் இல்லாமல் இருக்கும்.

அப்போது அவர்கள் மிகவும் துவண்டு போய்விடுவார்கள். அந்த சூல்நிலையில் பக்குவப்பட வேண்டும். ஒரு தோல்விக்கு பல காரணங்கள் இருக்கலாம். அது என்ன என்று ஆய்வு செய்ய வேண்டும்.

அந்தக் குறைபாட்டை நாம் நீக்க தயாராக இருக்க வேண்டும். எந்த நிலையாக இருந்தாலும், அது தற்காலிகமே என்ற எண்ணத்துடன் எதிர் கொள்ள வேண்டும்.

இந்த நிலை மாறும் என்ற மனதோடு உழைக்க தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு நாம் உழைத்துக் கொண்டே இருப்போம் என்றால், அது தோல்வி அல்ல !அது நம்மை உயர்த்த தூண்டுகோலாக இருக்கும் நெருப்பு பொறி.

ஒரு செயல் செய்யும் போது தடைகள் ஏற்பட்டால் அந்த தடைகளை தகர்த்து தாண்டி செயல் புரிய வேண்டும்.எந்த ஒரு தொழிலும் உடனே பலன் தராது .சிறிது காலம் போகப் போக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எனவே,

நேர் மறையான எண்ணத்தை வளர்த்துக்கொண்டு வெற்றியை அடைய வேண்டும். அதுபோல் நல்ல சிந்தனையுடன் சிரித்த முகத்துடன் உழைக்க தொடங்குங்கள் எந்தத் தோல்வியும் உங்களை எதுவும் செய்யாது.

உங்கள் உழைப்பும் உங்கள் திறமையும் கண்டிப்பாக வெளிப்படும். அப்போது உங்கள் உழைப்பின் பயன் உங்களுக்கே புரியும். நீங்கள் சரியான திட்டமிட்டு செயல்பட்டவர் என்பதற்கு உங்கள் உயர்வை காரணமாக இருக்கும்.

தாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த துறையாக இருந்தாலும் அதில் முழு கவனத்துடன் தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றது போதும் என்று நிறுத்திக் கொள்ளக்கூடாது.

“கால மாற்றத்துக்கு தகுந்தாற் போல் அதற்கான வழி முறைகளைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். “
“கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு “எனவே, தெரியாததை தெரிந்தது போல் காட்டிக் கொள்ளக் கூடாது. தைரியமாகத் தெரியவில்லை என்று சொல்லி கற்று அடுத்த கட்டத்திற்கு முயல வேண்டும்.

வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் தோல்வியை கண்டு பயந்தவர்கள் அல்ல. சுய சிந்தனையுடன் இருப்பவர்கள். கடினமாக உழைத்தவர்கள். ஒரு நாளும் தோல்வியை சந்திக்க மாட்டார்கள்.

அவர்கள் உழைக்கும் உழைப்பே வெற்றிப் படியில் நிறுத்தி விடும். அந்த வெற்றி மகாத்தான வெற்றியாக இருக்கும் உழையுங்கள் உயருங்கள்.

Share.

Leave A Reply