13.அடக்கமுடைமை

121.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் .

மனம் ,மொழி ,உணர்வு, அடக்குபவர் வானோரில் ஒருவராய் போற்றப்படுவர் .அடக்கம் இல்லாதவரை துயரமான குற்ற செயலில் தள்ளி விடும் .

122.காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

காப்பது அறம். மன அடக்கம் உயர்வானால் அதைவிட உள்ளக்களிப்பு உயிர்க்கு இல்லை .

123.செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

சேர்தல் அறிந்து சேர்வது நன்மை பெறும் வாழ்க்கை .போதனை தெரிந்து செய்தால் அடக்கம் பெருமை தரும் .

124.நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

ஒழுக்கத்தில் அசையாது ,அழியாது மன அடக்கத்துடன் வாழ்பவன் உயர்வு ,மலை அரசனுக்கு கிடைக்கும் சிறப்பைப் போன்று பெருமை உடையதாகும்.

125.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து .

இறைவனைப்பணிந்து வணங்குவது நன்மை தரும். அவர் உள்ளத்துள் ,செல்பவரே செல்வங்கள் பெற்று பெருமை பெறுவார்..

126.ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒரு பிறப்பில் ஆமை போல் உடல் அடக்கி வாழ்ந்தால் அந்த நன்மை ஏழு பிறப்பிலும் பாதுகாத்து உடைமையாக வரும்.

127.யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

உடலில் மற்ற உறுப்புகளை காக்க முடியவில்லை என்றாலும் நாவில் வரும் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி கட்டுப்படுத்த முடியாவிட்டால் சொல் குற்றம் ஏற்பட்டு துக்கம் சோர்வு தரும் .

128.ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

ஒரு தீய சொல்லின் உண்டாகும் பொருள் குற்றம் நற்குணத்தை பாதுகாக்காது போய்விடும்.

129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு .

நெருப்பினால் ஏற்பட்ட புண் ஆறிவிடும். ஆறாதது நாவினால் காயம் செய்த குற்றம்.

130..கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து .

சினம் காத்து கல்வி கற்று அடக்கத்துடன் பணிசெய்பவன் தகுதி பார்க்க அறக்கடவுள் ஓடுநீர் அளவு இடம் கிடைத்தாலும் அவனிடம் நுழைந்து விடும்.

Share.

Leave A Reply