22. ஒப்புரவறிதல்

211.கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு .

மாற்றுதவி விரும்பாமல் கடமையைச் செய்யும் மழை போல கடமை செய்யும் உயர்ந்தரும் உண்டு.

212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

வலிமையுடன் மிகச் சம்பாதித்த செல்வம் எல்லாம் அறச் செயலுக்கு உதவுவதற்கே காரணமாகும் .

213. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற .

புதிய மேலான அமரர் உலகிலும் இந்த பூமியிலும் பெறுவது உலக வொழுக்கம். சமமாக நன்மை தருவது அதற்குப்பின்புதான்.

214.ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும் .

சமுதாயத்தில் ஒற்றுமையுடன் உதவி வாழ்பவன் உயிர் வாழ்பவனாக மதிக்கப்படுகிறான் .அப்படி வாழாத மற்றவர்களை உயிர் இருப்பவர்களாக கருத மாட்டார்கள் .

215.ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

ஊரார் நீர் எடுக்க நிறைந்த ஊருணி போல் உலக மக்களுக்குப் பயன்படும் அறிவுடையோரின் செல்வம் .

216.பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடைய யான்கண் படின் .

பலன்தரும் மரம் ஊர் நடுவில் பழுத்தால் எவ்வாறு பயன்படுமோ அதுபோல நயமுடன் அன்பு செலுத்துபவரிடத்தில் உள்ள செல்வமும் பயன்படும் .

217.மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

நோய்தீர்க்கும் மரம் எல்லாமே பயன் தருவது போல் பெருந் தன்மை உள்ளவரிடத்தில் சேரும் செல்வமும் பயன்படும் .

218.இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

துன்பம் வரும் காலத்திலும் செல்வம் குறைந்தாலும் உதவுவதில் இருந்து விலகமாட்டார். கடமையைசெய்யும் அறிவுடையோராக காட்சி தருவார்.

219.நயனுடையான் நல்கூர்ந்தா ளாதல் செயும்நீர்
செய்யாது அமைகலா வாறு .

அன்புடன் உதவும் ஒருவனுக்கு வறுமை உண்டானால், இந்த பூமியில் சிறந்ததை செய்யமுடியாது. வருந்தி , மூங்கில் போல வளைந்து வலிமை கொள்வர் .

220.ஒப்புரவி னால்வரும் கேடெனின் அ.’.தொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து .

உலக ஒழுக்கத்தால் நெறி தவற நேர்ந்தால், ஒருவன் தனிமைப்பட்டு கொள்கை பற்று உடையவனாக இருப்பான்..

Share.

Leave A Reply