செந்தமிழ்வாணி ச. மல்லிகா எம்.ஏ.,
46..சிற்றினம் சேராமை
451.சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
கீழோர் சேர்க்கைக்கு பயப்படுபவர் பெருமை மிக்க சான்றோர் .சிறுமை குணம் கொண்டவர்கள் உறவாய் சேர்த்து சுற்றுவர் .
- நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு .
நிலத்தின் இயல்பு மண்ணில் நீர் அலைந்து அந்த மண்ணின் தன்மையைப்பெற்று இருக்கும்.அதுபோல மக்கள் கூட்டம் வாழும் சுற்றம், நட்பின் இயல்பால் அமையும் அவர்கள் அறிவு .
453.மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னாள் எனப்படுஞ் சொல்
மக்களின் இடம்,இசை, கொடைத் தன்மை எல்லாம் மனத்தால் ஏற்படும்.அவர் மேன்மை மக்கள் இன்னார் எனப் பேசும்படி நடப்பதில் இருக்கிறது .
454.மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு
மனத்தின் களைகளை களைந்து மற்றவர்கள் எடுத்துக் காட்டிச் சொல்லும் அளவிற்கு மணம்புரிந்து வாழ்ந்து காட்டுவதே அறிவாகும்.
455.மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்
மனதின் பரிசுத்தம் , செய்யும் செயலின் தூய்மை இவை இரண்டும் குலம் வாழும் சுற்றத்தாரை பொறுத்து மழை வருவது போல் இயற்கையாக வரும்.
456.மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை
மனம் பரிசுத்தமாக நன்மை செய்தவர்முன்னோர் வைப்பு நிதியாக அவர் செய்த நன்மை வாரிசுகளை வந்து அடையும் அவன் வாழும் கூட்டத்தின் தூய்மை இல்லாமை என்பதே இல்லாமல் நல்வினைப்பயன்தரும்.
457.மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்
மனதின் நன்மையே நினைக்கும் மனமுடையவர் எல்லா உயிர்களுக்கும் நல்ல ஆக்கம் தருபவராக இருப்பர்.இவருடைய இல்லத்தின் நன்மை செய்பவராக இருந்தால் எல்லாப் புகழும் தரும் .
458.மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து
மனதின் நன்மையே நினைக்கும் ஒழுக்கமுடைய சான்றோர்க்கு இல்லத்தாரின் நன்மையான செயலும் இன்பத்தை தரும்
459.மனநலத்தின் ஆகும் மறுமைமற் ற.’.தும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து
நன்மை செய்யும் மனம் உடையவர்க்கு பிறவாப் பயன் கிடைக்கும்.அவர் வழி இனத்தவர்க்கும், நல்வழி பாதுகாப்பாய் அமைந்து பெருமையைத் தேடித்தரும் .
460.நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூம் இல்.
ஒருவர்க்கு நன்மை செய்யும் பெரியவர்களுடைய இனத்தில் மணந்த வாழ்க்கைத் துணைவியை விட துணை வேறு இல்லை.அதுபோல் தீமை செய்பவர்களுடைய இனத்தில் மணந்த வாழ்க்கைத் துணையால் ஏற்படும் துன்பம் தருவதும் வேறு இல்லை .
=======================தொடரும்=============