செந்தமிழ்வாணி
டாக்டர் ச.மல்லிகாவின்

ஹைக்கூ கவிதைகள்        
          கண்ணாடி

        துளிரா செடி

வற்றிய தேரைக்கு வளரும் செடி
விரோதம்.

           நீரோட்டம்
வாழ்க்கை பூந்தோட்டம் வறுமை தேரோட்டம் உழைப்பு நீரோட்டம்.

             ஏழ்மை

கூரை வீடு
ஒழுகும் நீர்
ஏழ்மை.

       தெருவிளக்கு

சாலை வீடு
சாதனைப் படிப்பு
தெரு விளக்கில்.


    முதியோர் இல்லம்

பழுத்த கனி
விருந்தாய்
முதியோர் இல்லத்திற்கு.

         சூரிய உதயம்

சூரிய உதயத்தில்
பறவைகளின் கச்சேரி
மரசபாவில்.   

            ஒலி அலை

பாடும் பறவை
கேட்கும் செவி
காற்றில் ஒலி.

               பூரணம்

பற்றுதலைத் துறந்தால் பக்குவ பூரணமாய் இறைவன்.

     குழந்தை மொழி

பொக்கை வாய்
உதிரும் முத்துக்கள் மழலைச் சொல்.

          பொறுமை

குளத்தில் மீன்
கரையில் கொக்கு காத்திருப்பு.

                       தொடரும்

Share.

Leave A Reply