செந்தமிழ் வாணி
டாக்டர் ச மல்லிகா எழுதும் ஹைக்கூ கவிதைகள்.    
            கண்ணாடி

          அமைதி

சோகத்தை தூரவை

வாழ்க்கையை அனுபவி  

அமைதியே ஆனந்தம்.

             புரிதல்

வீண் பேச்சு வீணாக்கும்

விரும்பிச் செய்ய செயலாகும்

புரிந்தால் உலகம் நமதாகும்.

        புறா கூட்டம்

தரணி உயர

தலைமைச் சொல்

புறாக்கூட்டம்.


      குடும்ப அழகு

அமைப்பு என்பது பரந்தவுணர்வு

பகிர்ந்து கொண்டால் பேருயர்வு

பகிர்தல், புரிதல் குடும்ப அழகு.


                எளிது தொலைநோக்கியில் பக்கத்தில் காட்சி

மனம் ஒன்றிய நேசிப்பால்

பாராட்டுவது எளிது.


   தனித்துண்ணா

காக்கா கூட்டம் பெரியது

தனித்து உண்ண மனமில்லை

மனித நேயம்.


தொலைபேசி

தொலை பேசி சிறியது

தொடர்பு கொள்ள எளியது

புரிந்து நடத்தால் நலமது.


            எந்திரம்

கணக்குக்கு கணினி வேலைக்கு ரோபோ

எந்திரம் கூட ஓய்வில்

மனிதன் இன்று எந்திரமாய்.


        மனப்புண்

நல்ல சொற்கள்
பலயிருக்கு

தீய சொல் எடுப்பானேன்

மனப்புண் வார்த்தை.


               தரகர்

தட்டு நிறைய காசு

சோகத்தில் பிச்சைக் காரன்

தட்டிப் பறிக்கும் தரகர்.

                               மலரும்.
 

Share.

Leave A Reply