செந்தமிழ் வாணி
டாக்டர் ச. மல்லிகா எழுதும்….
ஹைக்கூ கவிதைகள்
         கண்ணாடி 

              காலம்

காலத்தை கடக்க விட்டு

பிடிக்க  முயற்சிப்பவன்

முள்ளில் நடப்பவன்.


              சின்னம்

தன்னம்பிக்கை தைரியம்

வீரத்தில் விவேகம்

எளிமையில் சின்னம்.

             உறுப்பு

உணர்வினை மதிக்காத

உறுப்பினர் மனநிம்மதி

செயல்படா உறுப்பு.


               உறவு
தள்ளாத வயதில்

தாமரை இலை தண்ணீர்

உறவு.

               கனி
குறை  சுட்டிக்காட்ட

நிறை  சுகமாய்

கையில் கனி.


              நலம்
உடலுக்கு ஓய்வு உறக்கம்

மனதிற்கு ஓய்வு ஊக்கம்

பேணுதல் நலம்.


            சொர்க்கம்
இருளுக்கு ஒளி

இல்லத்திற்கு மனைவி

அமைவது சொர்க்கம்.


            தெளிவு
அழகான ஆடை மகிழ

உயராத உழைப்பு நெகிழ

புரிவதே மனம் தெளிய.


             வலிமை
உடலுக்கு முதுகெலும்பு

உயர்வுக்கு முயற்சி

வலிமை.


             இயல்பு
தவறுகலே துயரம்

நம்பிக்கையே ஆனந்தம்

ஏற்பதே இயல்பு.

                               மலரும்

Share.

Leave A Reply