செந்தமிழ்வாணி
டாக்டர் ச. மல்லிகாவின் ஹைக்கூ கவிதைகள்
கண்ணாடி
நிலாச்சோறு
முழு நிலா
முழுங்காத உணவு
அம்மா இல்லை.
பயம்துறந்து
உயர்ந்த சாலை
ஊசி வளைவுகள் இயற்கையில் இணைந்து
பனி
பச்சைக் கம்பளத்தில் முத்துப் புள்ளிகள் மார்கழிப் பனி.
உறவு
ஊர் ஊராக
மாற்றும் வேலை உறவுகள் பல.
ரசிப்பு
ஓலை வீடு
ஊடுருவிய சூரியன் ரசிக்கும் சிறுமி.
செஞ்சோலை
சமாதானம் பேசி
சோலை வனத்து பூக்கள் சவக்கிடங்கில்.
ஆசான்
மனசாட்சி ஆசான் தூண்டுதல் தொல்லை உணர்வதே உண்மை.
திறமை
உடலுக்குத் தலை உயர்வுக்குத் தலைமை நடத்துவதே திறமை.
நரகம்
பண்பு வேசமானால் பாசம் மோசமாகி
வாழ்வு நரகமாய்.
வெற்றி
நகர்வது இலக்கு நடத்துவது குறிக்கோள் அடைவது வெற்றி.
தொடரும்