அவசியம் என்று எனக்கு எப்போதும் தோன்றியது இல்லை
அலைகளுக்கு அது
எப்போதும் தேவை இல்லை
துவக்கத்தின் புள்ளி முதல் வெற்றியின் எல்லை வரை நில்லாது செல்லும் இந்த பயணத்தின் தடை வரலாம்
நடக்கின்ற பயணத்தில்
வரும் தடைகள் பெரிதல்ல வெற்றி அடையும் முன்
மனதில் தடை உனக்கு வருவது ஏனோ!
நேற்று நீர் தோற்றிருந்தால் நாளை வெற்றிடலாம்
நாளை பசி எடுத்தால் மீண்டும் உண்றிடலாம்!
நம்பிக்கை தடை பட்டால்
எப்படி வென்றிடுவாய்?
ஊரெல்லாம் அலை அலையாய்
வேகத்தடை இருக்கும் உன்னை நிறுத்தி உயிர் காக்க
தடை தாண்டி வெல்லும்
உன் எண்ணம் இருக்கும் வரை எதுவும் பயம் இல்லை
வாழ்க்கை என்னும் பயணத்தில் உனக்கு
நீயே தடை செய்து
உன் வேகத்தை குறைத்திடாதே!