இன்னும் ஒரு வழி பிறக்கும் அது சொல்லும் படி இருக்கும் உலகை வெல்லும் உளி கிடைக்கும்
தடை உடைப்போம் வா!

எண்ணம் வழி நடத்தும் நம்மை திண்ணம் செயல் படுத்தும் நம்மை
விண்ணும் தலை இடிக்கும் வரை
வீறுகொண்டு எழுவோம் வா!

உப்பு நம்மை உருக்கும் என்றும் நட்பு நம்மை இணைக்கும் நம் மொத்த கை இணைக்கும் ஒன்றாய்
உச்சிவான் அடைவோம் வா!

பிரிவினை உடைத்திருவோம் நாம்
ஒற்றுமை நிலைத்திடுவோம் நாம்
நிச்சயம் ஒன்று பட்டால் நம் இலட்சியம் ஜெயித்திடுவோம் வா!

சூழ்ச்சிகள் நம்மை சூழும் என்றும்
சூழ்நிலை தினம் மாறும் அன்றும்
பிரியாது இணைந் திருந்தால் நாம்
இமயத்தை வென்றிடுவோம் வா!

தினம் தினம் கூட்டம் எழும் நம்மை வெல்ல போட்டி இடும் ஒற்றுமையாய் எதிர் கொண்டு நம்
வெற்றியை உறுதி செய்வோம் வா!

Share.

Leave A Reply