விளையாடு கண்ணு விளையாடு
விரும்பி நீயும் விளையாடு
சேர்ந்து நீயும் விளையாடு
சோம்பல் படாமல் விளையாடு
ஆடி ஓடு விளையாடு
ஆசை தீர விளையாடு
சண்டை ஏதும் போடாமல்
சமரசமாய் நீ விளையாடு
விழுந்து விழுந்து எழுந்தாலும்
விடாமல் நீ விளையாடு
தோல்வி என்பதை சமமாக
ஏற்றுக் கொண்டு விளையாடு
மாலை நேரத்தில் விளையாடு
மனம் நிறைந்து விளையாடு
சிரித்துப் பேசி விளையாடு
சிகரம் தொட விளையாடு