திறக்க கண் திறக்க
முன் உதித்த சூரியனே!

ரசிக்க நான் ரசிக்க
முன் மலர்ந்த பூவினமே!

சுவைக்க நான் சுவைக்க உணவளித்த தாய்குணமே!

மலைக்க நாள் மலைக்க
வான் உயர்ந்த மலை அழகே

குடிக்க நான் குடிக்க
பாய்ந்து வந்த நீர் இனமே

தவிக்க நான் தவிக்க
ஆறுதல் தந்த பெண் இனமே

வியக்க நான் வியக்க
விந்தை செய்யும் என் வாழ்வே

கசக்க நான் கசக்க
என்னுள் இருக்கும் தீ குணமே!

அழிக்க உனை அழிக்க இனித்திடும் என் வாழ்வே.

Share.

Leave A Reply