ஆண்டவனின் படைப்பினிலே அற்புதவானத்துப் பெண்ம் பல கண்டேன் அண்டமெல்லாம் உருண்டையாய்
ஆடிவரும் பந்தாய்

இயற்கையின் சீற்றத்தால் சிந்திவரும் மழையாய்
ஆறாய் குலமாய்
வீசி வரும் தென்றலாய்

பாலையும் சோலையும் குளிரும் பனியும்
காடும் மலையும் என அற்புதமாய் படைத்தாய்

பாலாவின் சுளையை பக்குவமாய் வைத்தது போல் பார்த்து பார்த்து
பக்குவமாய் படைத்தாய்

வானத்துப் பெண்ணுக்கு
வட்ட நிலா பொட்டிட்டு புன்னகையில் பூத்திட
புதுவெள்ளி நீ படைத்தாய்

கிணற்றுத் தவளையாய் வீட்டிற்குள் இருக்காமல்
பறந்து சுற்றிவர
விமானம் படைக்க வைத்தாய்

பழமொழி நீ படைத்தாய் பாரெல்லாம் பரவச் செய்தாய் அன்பென்ற மனதினில் அனைவரையும் இணைத்து விட்டாய்.

Share.

Leave A Reply