இராமையா சின்னம்மை பெற்றெடுத்த இராமலிங்கம்
அண்ணன் அண்ணியிடம் வளர்ந்த பிள்ளை
இராமலிங்கம் தலைப் பேனையும் கொல்லவிடாது
தலையில் விட்டுக் காத்த இரக்கசீலர்
சரலமாக கந்தகோட்ட முருகனைப் பாடினார்
சிந்தனை முழுவதும் இறைவன் மீதிருக்க இராமலிங்கம் பள்ளிக்குப் போகாத பண்டிதர்
கடுக்கனை திருடனுக்கு கொடுத்த தயாளன்.
பசித்த பிள்ளைக்கு வடிவாம்பிகை தமக்கை
வடிவில் வந்து உணவு கொடுக்க
புசித்த பிள்ளைக்கு முருகன் அருள்கொடுக்க
சொற் பொழிவு தடையின்றி வழங்க
கசிந்து நடராஜர் அருள்கூடி சிதம்பரர்
அருளால் தண்ணீரில் விளக்கு எரிய
பசித்தவர்க்கு உணவு தெய்வ வழிபாடு
அணையா அடுப்பு அன்னதான தர்மசாலை.
ஒருதிரை மாயசக்தி ஒருதிரை கிரியாசக்தி
ஒருதிரை பராசக்தி ஒருதிரை இச்சாசத்தி
ஒருதிரை பராசக்தி ஒருதிரை ஆதிசக்தி
ஒருதிரை தூசிற்சக்தி ஒளிருமச் சக்திஏழுமே
கருப்பு நீலம் பச்சைசிவப்பு பொன்மை வெண்மை
பொருந்தி ஆறும்கலந்த கலப்போடு எழுதிரை அருட்பெருஞ் சோதிச்சுடரின் தனிப்பெருங் கருணை
வடலூர் வள்ளலார் ஞான சோதியே.