தூண்டிவிடும் சுடர் விளக்கு
போல்
தூண்டு கோல் வேண்டும் வாழ்வில்
ஆலோசனை சொல்வது எளிது தான்
அதன் வழி நடப்பது அரிது.

நா… காக்க நலம் கூடும்
நாவன்மை கூடமனம் காக்க வேண்டும்
நல்லவை வசம் வர வேண்டின் நன்றி மறவாமை என்றும் வேண்டும்.

சிக்கனம் சிறுவயதில் வரும் போது
சேமிப்பு பெரிய வயதில் உதவும்
மனம் போதும் என்று நினைத்தால்
மனம் பாரம் இல்லாமல் போகும்.

சேற்றில் முளைத்த தாமரை பூஜைக்கு
சேரியில் பிறந்தாலும் கல்வி உயர்த்தும்
புறமுதுகு காட்டாத மன்னன் போல்
புறம் சொல்லாது நிற்பது வீரம்.

கொடிய நஞ்சு இரக்கமில்லா மனம்
கொடிய பாம்பு கொத்தாது வணங்க
அன்பான நேசிப்பு அகிலம் வெல்லும்
ஆதரவு கரமாய் நிலைக்கும் நட்பு.

உலகம் சுழல்வது போல் வாழ்வும்
உருண்டையாய் சுழல்வது இயற்கை என்றால்
துன்பம் கண்டு அச்சம் வேண்டாம்
துன்பச் சுழற்சியில் இன்பம் வரவு.

Share.

Leave A Reply