மார்கழி மாதம் அதிகாலை எழுந்து
நீராடி வாசலில் கோலம் பூவைத்து
கார்மேக கருக்களில் பிரம்ம முகூர்த்தத்தில்
கோவிலுக்குச் சென்று திருமஞ்சனம் கண்டு
பார்புகழும் திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி
பஜனை பாடி இறைவனை வணங்கி
சார்பு பற்று நீங்க வலம் வந்து
அருள் பெறுவது மங்கையர் நோன்பு
கன்னிப் பெண்கள் முதல் முதியவர் வரை
நோன்பு இருப்பது குடும்ப நலனுக்கே
தன்னலம் கருதாது வழிபாடும் போது
மனமும் உடலும் ஆரோக்கியம் பெரும்
சன்மார்க்க நெறியால் நன்மைகள் விளையும்
சக்கரச் சுழற்சியில் சகலமும் நலமாகும்
திண்மை விலகும் தீரம் உருவாகும்
திடமான நம்பிக்கையே மங்கையர் நோன்பு
இல்லத்தை தூய்மை செய்து பொலிவுடன்
போகி அன்று காப்புக் கட்டி
நல்ல நேரத்தில் கதிரவனுக்குப் பொங்கலிட்டு
குலவை போட்டு மஞ்சள் கரும்பு வைத்து
இல்லறம் நல்லறமாக இறைவனை வணங்கி
இன்ப பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லி
வெல்லப் பொங்கல் பகிர்ந்து உண்டு !
வள்ளுவர்வழியில் வாழ்வதுவே மங்கையர் பொங்கல்