பொங்கும் பொங்கல் பொங்கட்டும் 
தங்கும் மங்களம் தங்கட்டும் 
செங்கரும்பாய் உள்ளம் இனிக்கட்டும் 
செங்கதிரை சூரியன் பரப்பட்டும் 
மங்காத வளங்கள் வழங்கட்டும்  
எங்கும் மகிழ்ச்சி நிரம்பட்டும் 
 
போகிப் பொங்கல் புலரட்டும் 
பழையான போகியில் எரியட்டும்
புதியன புதிதாய் மலரட்டும் 
புதுப்பானையில் பச்சரிசி நிறையட்டும் 
புதுப்பொங்கல் போல்மனம் பொங்கட்டும் 
பல வளங்கள் பெற்றேஉளம்   மகிழட்டும் 
மாட்டுப் பொங்கல் மண் மணக்கட்டும் 
,மஞ்சு விரட்டும் நடை பெறட்டும் 
மக்கள் மனமும் குளிரட்டும் 
வள்ளுவர் தினத்தை வணங்கட்டும் 
வள்ளுவன் குரலாய் வாழட்டும் 
வள்ளுவம் உலகை ஆளட்டும் 
காணும் பொங்கல் களைக் கட்டட்டும் 
களிப்புடன் சுற்றம் இணையட்டும் 
கடற்கரையில் சொந்தங்கள் கூடட்டும் 
கதைகள் பேசிக் களிக்கட்டும் 
கற்கண்டாய் இதயம் இனிக்கட்டும் 
கவிதைபோல் வாழ்வு அழகுறட்டும் 
தைமாதம் முதல்நாள் பிறக்கட்டும் 
தைப் பொங்கல் பொங்கி வழியட்டும் 
தமிழ்த் திருநாள் சிறப்பைப் பெறட்டும் 
தமிழர் வாழ்வில் நலம் நிறையட்டும்.
Share.

Leave A Reply