இன்னும் நூறு வருடங்கள் கழிந்த பின்னும் என் செய்கையில் உங்கள் உணர்வுகள் ஏதேனும்
வெளிப் பட்டுக்
கொண்டே தான் இருக்கும்.
என் வாழ்வில்
எல்லா தருணங்களும் உங்களால் உருவாக்கப்
பட்டது தானே!
நான் என்னையே
உங்களிடம் தானே
கற்றுக் கொண்டேன்
ஆனாலும் நமக்குள்
ஏதோ ஒரு….
இனம் புரியாத இடைவெளி,..
அடர்த்தியான
மௌனம்
சாதாரண எதிர்பார்ப்புகள் எல்லை மீறாத சண்டைகள் எல்லாவற்றையும் தாண்டி நிலைத்தது என்னிடம் உங்களை ரசிக்கும்
உங்கள் பாசம்.
அன்புள்ள
அப்பாவிற்கு
அன்பு மகன்.