நாம் எதையும் சரியாகப்
புரிந்து கொள்வது இல்லை அப்படி புரிந்து கொள்ள தொடங்கினால்
புரியாத விசயங்களும்
புரியத் தொடங்கும்.

அர்த்தம் புரியும்
சில விசயங்களுக்குள்
பல அர்த்தங்கள்

புதைந்து கிடக்கும்
ஒரு மண்ணிற்குள்
ஒரு கடலுக்குள்
இருக்கும் புதையலைப் போல…

ஒரு பகவத் கீதை புத்தகம் இதை ஒரு பத்து வயது
பையன் படிக்கிறான்
அதே புத்தகத்தை
இருபது வயது
இளைஞன் படிக்கிறான்.

அதே புத்தகத்தை
எண்பது வயது முதியவரும் படிக்கிறார்

ஆனால் மூவருக்கும்
சரியாக அந்தக்
கருத்துக்கள் சென்று விடுமா?

சிறுவனுக்குப் புரியாமலே இருக்கலாம் இளைஞனுக்குப் புரியலாம்.ஆனால்
அனுபவம் இல்லாததால் அதை உணர மறுக்கலாம்.

முதியவருக்கோ புரிந்து அனுபவித்து அதை
ஏற்றுக் கொள்கிறார்
புத்தகம் ஒன்றுதான்
ஆனால் அதை
புரிந்து கொள்ள
நமக்கு பக்குவம் வேண்டும்.

அந்தப் பக்குவத்தை எது தருகிறது என்றால்
இதை நான் படித்துப்
புரிந்து கொள்ள
வேண்டும் என்ற
எண்ணம் நமக்கு
எப்போது வருகிறதோ!

அதைப் பற்றி நாம்
ஆராயத் தொடங்கும்போது அதில் நம்மை
ஈடுபடுத்தும் போது அதைப் பற்றி சிந்திக்கும்போது நமக்கு அதைப் பற்றியே
சிந்திக்கும் போது

நமக்கு அதைப் பற்றிய
அறிவு கிடைக்கிறது

எனவே, புரியாத விசயங்களைத் தெரியாது
என நினைக்காமல்
புரிந்து கொள்ள ஆசைப்படுங்கள்

அந்த ஆசை
உங்களின் கனவாக மாறி
அந்த கனவு
உங்கள் உணர்வுகளில் ஓடி புரியாத விசயங்களைத் தேடி புரிய வைத்துவிடும்.

ஒவ்வொரு விசயத்தையும் புரிந்து கொள்ள
ஆரம்பித்து விட்டால் முகச்சுழிவு எல்லாம் புன்னகையாக மாறிவிடும்

இறைச்சல் எல்லாம்
இசையாகி விடும்
தோல்வி எல்லாம் வெற்றிகளாகி விடும்
துன்பம் எல்லாம்
இன்பமாகி விடும்.

Share.

Leave A Reply