புரட்சி கவிஞர் பாரதிக்கு தாசன்
          எழுச்சி மிகுந்த இடத்துக்கு சொந்தக்காரர் வரலாறு படைத்த கவிதை மிடுக்கு
          துடிப்பாய் இயங்கும் கவிதை ஊற்று
உரத்து பேசும் சுதந்திர தாகம்
          உறுதி கொண்டு உழைத்த ஞானம்
கரம் இருப்பதே கடமை செய்யவென
        கல்வி கண்திறந்த நல்ல ஆசிரியர்.


புதுச்சேரி மண் கவிவாசம் கமழும்
         பாவேந்தர் மனதில் நிழலாய் ஓடும்
மது தாக்கம் மனதில் தாக்கியதால்
         குடும்ப விளக்கு கோபுரமாய் உயர்ந்தது
புதுமெட்டுப் போட்டு பாட்டு எழுதி
          சங்கு ஒலி எழுந்தது கீதமாய்
செதுக்கிய செம்மையான தமிழ் அமுது
       அழியா வரம் பெற்றது என்றும்.


புகழ் என்பது உமக்குச் சொந்தம்
       புரட்சி என்பது அதில் அடக்கம்
அகல் போல் சுடர் விட்டு   
       அகம் நிறைந்த பாரதி தாசன்
நிகர் இல்லை இந்த மண்ணில்
       நிலையான இடம் உமது வாசம்
சுகம் தரும் கவிதை வரிகள்
       சுகந்த மலராய் அர்ச்சனை செய்கிறோம்.         

Share.

Leave A Reply