அம்மாவின் கருவறையோ நெறிப் படுத்தும்
அன்பு மொழியோ சிறைப் படுத்தும்
வாழ்க்கை நெறியை வழியாய் சொல்ல
பாட்டன்
உண்டு குறளின் வடிவில்

தப்பு தப்பாய் தாளங்கள் போட்டால்
தரமான பாட்டு கிடைக்குமா அப்போது ?
பண்பாட்டை கொஞ்சம் மாற்றி அமைத்தால்
பாசமிகு குடும்பம் கிடைக்குமா அப்போது ?

மண்ணை வளமாக்க வானம் பொழிகிறது
மரங்கள் பிறருக்காக காய்த்து கனிகிறது
இயற்கை வளங்கள் மண்ணுயிர் காக்க
மெழுகாய் உருகி கொடுப்பவர் உயர்வார்

விருந்து கொடுப்பது தமிழர் பண்பு
உயிரை மதிப்பது மக்கள் பண்பு
ஒதுங்கி வாழ்தல் விலங்கின் பண்பு
கற்றதை கற்பித்தல் அறிஞர் பண்பு

அகிம்சை காத்த காந்தி நெறி பாட்டிசைத்த பாரதி சுதந்திர தாகம்
பொறுமை காத்த பண்பால் தானே!
பெருமை தாங்கும் இந்தியராய் இன்று

வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலார்
வல்லரசு இந்தியாவிற்கு வழிகாட்டிய அப்துல்கலாம் தன்னையே வருத்தி வாழ்ந்த அன்னை தெரசா
உயர்ந்து வாழ்வதும் பண்பு நெறியால்.

Share.

Leave A Reply