மாணவர்களே நீங்கள்
ஒரு பானை,குடம், ஒரு காலி பாத்திரம்.

உங்களைச் சுற்றிலும் எல்லாமும் சிதறி கிடைக்கிறது.

எது தேவையோ
நிரப்பிக் கொள்ளுங்கள்.

நீங்கள் நிரப்பப் பட்டால் உங்களை அள்ளி எடுக்க ஆயிரம் கரங்கள் ஓடிவரும்.

நீங்கள் உயரமான இடத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள்.

உங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட போட்டி போடுவார்கள் உங்களை நிரப்பிக் கொள்ளுங்கள்.

காலி பாத்திரம் மூலையில் கவிழ்ந்து கிடக்கும்
நிரம்பிய பானையோ ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும்.

நீங்கள் உங்களை நிரப்பிக் கொள்ளுங்கள்
உங்களை இந்த உலகம் உயரத்தில் உட்கார வைக்கும்.

உள்ளதும் இல்லாததுமான உணர்வுகளை விட்டுவிட்டு உண்மைகள் இல்லாத உறவுகளை விட்டுவிட்டு

நிலையில்லாத நட்பை
தள்ளி வைத்துவிட்டு
உங்களை நீங்களே
உற்றுப் பாருங்கள்.

உங்களுக்கு எவ்வளவு இடம் இருக்கிறது
உங்களைச் சுற்றி எவ்வளவு இடம் இருக்கிறது.

உங்களைச் சுற்றி எவ்வளவு சிதறி கிடைக்கிறது தாமதிக்காதீர்கள் உங்களை நீங்களே நிரப்ப ஆரம்பிங்கள்.

நீங்கள் நிறைய நிறைய நிறைகுடமாக தழும்பாமல் இன்னும் தேடுவீர்கள்.

Share.

Leave A Reply