ஏடுகளை புரட்டினால்
பழைய பாரதம் தெரிகிறது ஒற்றுமையில் விளக்கம் புரிகிறது பழைய ஏட்டிலே!
கண்ணகியின் கதறல்
கலங்க வைக்கிறது மணிமேகலையின் கதை மனதைத் தொடுகிறது.
ஔவையின் பாடல்கள்
அசர வைக்கிறது
பாரின் பெருமை
பார் புகழ்கிறது.
வள்ளுவரின் குறளினில் உலகம் உய்க்கிறது எல்லோரும் மடிந்தார்கள் உனக்கு மரணம் இல்லை.
உடலை மறைக்க
ஆடை அழகு
உள்ளத்தில் ருசிக்க
ஏடு அழகு!
சாதி மத
பேதம் இன்றி
சுற்றி வரும்
ஏடு நீயே !
உன்னுடன் ஒன்றி
அழவும் செய்வர்
சிரிக்கவும் செய்வர் சிந்திக்கவும் செய்வர்
நூலகத்தில் உன்னை
பூட்டி வைத்தாலும் நுண்ணறிவை மக்களுக்கு பரவச் செய்வாய்.