என்ற துவங்கியது என்று யாரும் சொல்வதற்கில்லை எதற்கு துவங்கியது என்று கூறி முடிப்பதற்கு இல்லை

துடித்துக் கொண்டே
இருப்பது தான் இதன்
இயல்பு
இதயத் துடிப்பென்று
யாரும் தவறாய் கருதாதீர்

இது கடல் அலையின்
துடிப்பு
கரு விதையின் துடிப்பு

எங்களுக்குள்
பொதுவான தனித்துவம் நிறைந்ததாக
துடிப்பது
கடவுள் என்று
பலர் சொல்வார்கள்

முயற்சி என்று
பலர் சொன்னார்கள் நம்பிக்கை என்று
பலர் உரைத்தார்கள்

உழைப்பு என்று
பலர் வென்றார்கள்
காதல் என்று
பலர் எண்ணங்கள்

நட்பு என்று
பலர் உணர்ந்தார்கள்
விடியல் என்று
சிலர் நினைப்பார்கள்

புரட்சி என்றம்
உரைப்பார்கள்
கவிதை என்றே
எழுதுவார்கள்

அறிவு என்று மட்டும் எண்ணுவார்கள்
ஞானம் என்றும்
கூறுவார்கள்

எதுவா இருந்தாலும் முடிவில்லாமல்
விழித்துக்
கொண்டே
ஒவ்வொரு வனுக்குள்ளும் தொடர்ந்து கொண்டு
இருப்பது அந்த…
உயிர் துடிப்பு.

Share.

Leave A Reply