தமிழ் உணர்ச்சி
அது தாய் உணர்ச்சி
தடையின்றி பொங்கி வரும் தமிழரின் ஓர் உணர்ச்சி.

ஆணி வேர் போல்
அடிவரை சென்றே இருக்கும்.

நாடி நரம்பெல்லாம்
இரத்தமாய் பாய்ந்திருக்கும்.

பேச்சின் பொருளாய் இருக்கும் செயலின் பயனாய் இருக்கும்.

ஆதியில் ஊற்றெடுத்த
அற்புத அமுதூற்று அதை எத்தனை நிறம் மாற்றி
யார் என்ன செய்தாலும் செம்மொழியாய் செழித்து நிற்கும் வற்றாத
தேன் ஊற்று.

அழித்துவிடும் ஆசையிலே ஆயிரம் பேர் வந்தாலும் புதைத்து விட்ட
மாமதையிலே
தொள்ளாயிரம் பேர் சென்றாலும்
சிரித்துப் புன்னகையில் சிரித்துப் பூத்திருக்கும்
கருத்துக் கவிதைகளும் பொருத்து தோள் கொடுக்கும்.

கவிதைகளில்
காதல் சொல்ல
நூறு மொழி பிறந்தாலும் கல்வியையும் கவிதையில் சொல்ல இந்த
காந்த மொழி உண்டு.

அறிவியல் கருத்தெல்லாம் அடுக்கடுக்காய்
புத்தகம் செய்யும்
அந்நிய மொழிக்
கெல்லாம் நான் உரைப்பேன்!

அத்தனை அறிவியலும் சூத்திரமாய் சுருக்கித்
தந்த தமிழ்
என்றும் நமக்குள்ளே
நிறைந்து துடித்திருக்கும்
தமிழ் என்றும்
தழைத்து வாழும்.

Share.

Leave A Reply