வெண்சாமரம் வீசும் தென்னங்கீற்றே!
உன் மேனியில் ‘வெயில்’ சுட்டாலும்
பிறருக்காக நீ ‘காற்று’ வீசுகிறாய்…

பூச்சிகள் தீண்டிய ‘தேகப்பற்றில்’
‘பூ’ வில் அரசனான பூவரசம் பூவே
உன் காய்களை அழுத்திப் ‘பூச ‘தொடராது ‘பற்று’ தொலைதூரம் போகும்!

பூவின் புன்னகையால் பூரித்து  போனாயே
உன் தேகத்தை உறுதியாக்க நீ ‘உடற்பயிற்சி’ என்ன செய்தாய்
தேக்கு உன் ‘உறுதி’ அவர்களுக்கும் வரட்டும்!

தன்னலமே  சிறிதும் இல்லாமல் உன்னையே தானமாக்கும் வேம்புவே! கருவப்பட்டதுண்டா?
இல்லையே! இல்லையே! அதனால் உயர்ந்தவனாக மகுடம் சூட்டி பிறருக்காக வாழ்கிறாய்!

குழந்தை அடித்தாலும் பொறுத்துக் கொள்பவள் அம்மா!
கல்லெடுத்து அடித்தாலும் பொறுத்’தாயோ?’
‘மா’ என்பதாளா?

‘முத்தம்’ கொடுத்து மகிழ்பவள்  அன்னை
‘கனி’ கொடுத்து மகிழ்ந்தாயே மாமரமே? உன்னை பெண்கள் விரும்புவது சகோதர உணர்வாளே!


      
      

Share.

Leave A Reply