அவர்களது அரிச்சுவடியில் இருந்து அணு அணுவாய் என்னை செதுக்கும்
உத்தியை அறிகிறேன்.
அவர்கள் வாழ்க்கை
வழி முறையில் இருந்து தொடர்கிறது…
என் வாழ்வின் ஒளி!
அவர்களது நம்பிக்கையின் மூலமே என் நம்பிக்கையை வளர்த்து வாழ்கிறேன்.
அவர்கள் யார் என்று
கூறிவிட முடியாது நல்லோர்களை யாரும் மறைத்து விட முடியாது.
எல்லோரும் ஒருநாள் இறந்துவிட்டாலும் கூட எப்போதும் நம்மிடம் வாழ்பவர்கள் நல்லோர்கள்.
என்னை மனிதனாக்கியது அவர்கள் விட்டுச் சென்ற வார்த்தைகள் தான்.
நான் வீழ்ந்த போது
என்னை தூக்கிவிட்டது!
நான் துவண்ட போது
என்னை தூசி தட்டியது!
வெற்றி பெற்ற போது
வாழ்த்து சொன்னது! தோல்வியுற்ற போது
தட்டிக் கொடுத்தது!
என்னை மனிதனாக்கியது! நான் எதுவாக ….
ஆனாலும் என்றும்
என்னோடு இருக்கிறது! அவர்களது வார்த்தைகள் பெற்றோரின் அடிச்சுவடிகள்.